உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் தலைமுறை அணு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் தலைமுறை அணு உலை (generation III reactor) இரண்டாம் தலைமுறை அணு உலையை, தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு வளர்ச்சிகளை கருத்தில்கொண்டு, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கியதாகும். இந்த மேம்பாடுகள் பராமரிப்பு மற்றும் முதலீட்டுச் செலவுகளைக் குறைத்து பாதுகாப்பினைக் கூட்டும் வகையிலான எரிபொருள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேம்பட்ட வெப்ப வினைத்திறன், இயக்கியற்ற பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சீர்தரப்பட்ட வடிவமைப்புகள் ஆகும்.

இத்தகைய முன்னேற்றங்கள் நீண்ட இயக்க கால வாழ்வை (முழுமையான பராமரிப்பிற்கும் அணுக்கரு உலைக்கலன் மாற்றுவதற்கும் முன்னதாக 60 ஆண்டுகள் இயக்கவும், 120+ ஆண்டுகள் வரை விரிவாக்கப்படக் கூடியனவாகவும்) அளிக்கின்றன; எதிராக இரண்டாம் தலைமுறை அணு உலைகள் 40 ஆண்டுகள் இயக்க வாழ்வை (80 ஆண்டுகள் வரை விரிவாக்கக்கூடிய அளவில்) கொண்டுள்ளன. மேலும், முந்தைய தலைமுறை அணு உலைகளில் நிலவுவதைவிட கருவ சிதைவு நிகழ்வடுக்குகள் இந்தவகை அணு உலைகளில் குறைவானதாகும் — ஐரோப்பிய அழுத்த அணு உலைகளுக்கு 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 60 கருவ சிதைவு நிகழ்வுகள்; ESBWRகளில் 1000 மில்லியன் அணு உலை-ஆண்டுகளுக்கு 3 கருவ சிதைவு நிகழ்வுகள் [1] — இரண்டாம் தலைமுறை அணு உலையான கொதிநீர் அணு உலை BWR/4 அளிக்கும் 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 10,000 கருவ சிதைவு நிகழ்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு குறைந்தவை l[1]

மூன்றாம் தலைமுறை வடிவமைப்பாளர்கள் இவ்வகை அணுஉலைகள் முன்பிருந்த அணுஉலைகளை விட பாதுகாப்பானவை என்று கூறுகின்றபோதும் சில அறிவியலாளர்கள், கவலையுறும் அறிவிலாளர்கள் சங்கத்தின் மூத்த அறிவியலாளர் எட்வின் லைமான் போன்றவர்கள் இக்கூற்றினை எதிர்க்கிறார்கள்; முதலீட்டுச் செலவுகளைக் குறைக்குமுகமாக மாற்றப்பட்டுள்ள வடிவமைப்புகளால் கதிர்வீச்சு அடக்குக் கலன்களின் வலிமை மற்றும் கற்காரை கட்டிடடங்களின் வலிமை குறித்து கவலை தெரிவிக்கிறார்கள்.[2]

முதல் மூன்றாம் தலைமுறை அணுஉலைகள் சப்பானில் கட்டப்பட்டுள்ளன.ஐரோப்பாவில் பல அணுஉலைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளன. வெஸ்டிங்அவுஸ் வடிவமைத்த AP1000 என்ற மூன்றாம் தலைமுறை அணுஉலை சீனாவில் சான்மென் என்றவிடத்தில் 2013இல் இயக்கத்திற்கு வர உள்ளது.[3]

மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-07-04. பார்க்கப்பட்ட நாள் 2011-12-29.
  2. Adam Piore (June 2011). "Nuclear energy: Planning for the Black Swan". Scientific American. 
  3. Wang, Binghua. .chinadaily.com.cn/bizchina/2010-03/22/content_9623355.htm "3rd-generation nuclear power plant to debut in 2013", China Daily, Beijing, 2010-03-22. Retrieved on 2010-04-13.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_தலைமுறை_அணு_உலை&oldid=3576209" இலிருந்து மீள்விக்கப்பட்டது