மூன்றாம் சரபோஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூன்றாம் சரபோஜி ராஜா போன்ஸ்லே (Serfoji III) மராத்தி: शरभोजी राजे भोसले (तृतीय)) என்பவர் தஞ்சாவூரின் கடைசி மராத்திய மன்னரான சிவாஜியின் வளர்ப்பு மகனும், தஞ்சாவூர் அரசின் மன்னராக தன்னை பாவித்து வந்தவரும் ஆவார்.

1855 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மராத்திய மன்னர் சிவாஜி ஆண் வாரிசு இல்லாமல் இறந்தார். அப்போது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால், கொண்டுவரப்பட்ட அவகாசியிலிக் கொள்கைப்படி, தஞ்சாவூர் சமஸ்தானமானது கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. 1855 அக்டோபர் 31 ஆம் நாள் ஒன்பது வயதான விஜய மோகன முக்தாம்பா பாயிக்கு தஞ்சாவூர் ராணி என்ற பட்டத்தை அளித்த ஆங்கிலேயர்கள், அவருக்கு சில அதிகாரப்பூர்வ சலுகைகளையும் வழங்கினர். ஆனால் தஞ்சாவூர் சிவாஜியின் தத்து மகனான மூன்றாம் சரபோஜியை அங்கீகரிக்க பிரித்தானியர் மறுத்து விட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_சரபோஜி&oldid=2670413" இருந்து மீள்விக்கப்பட்டது