உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் உலகப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் உலகப் போரின் ஒரு கற்பனையான சூழ்நிலையில் அணு ஆயுதப் போர் என்பது ஒரு பொதுவான கருப்பொருளாகும்.
அமெரிக்காவில் அணு ஆயுத பீரங்கி சக்தி சோதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மூன்றாம் உலகப் போர் (World War III) என்பது முதலாம் உலகப் போர் (1914–1918), இரண்டாம் உலகப் போர் (1939–1945) ஆகியவற்றின் பின்னர் ஏற்படும் என்று கருதப்படும் ஒரு கற்பனையான எதிர்கால உலகளாவிய சமராகும். அத்தகைய போரில், அதற்கு முன்பு நடந்ததைப் போலவே, அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதோடு, அப்போரில் உலகின் அனைத்து பெரிய வல்லரசுகளும் ஈடுபடுவதாக இருக்கும் என்று பரவலாக கருதப்படுகிறது. இதனால் பேரழிவு, உயிர் இழப்பு போன்றவற்றில் முந்தைய அனைத்துப் போர்களையும் விஞ்சுவதாக இருக்கும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு மன்காட்டன் திட்டத்தின் வழியாக அணு ஆயுதங்களை உருவாக்கி, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு தாக்குதல்களில் அமெரிக்கா அவற்றைப் பயன்படுத்தியது. அப்போதிருந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் அணுசக்தி பேரழிவு மற்றும் நவீன மனித நாகரிகத்தின் முடிவு அல்லது மனித அழிவு ஆகியவை மூன்றாம் உலகப் போர் பற்றிய ஊகங்கள் மற்றும் புனைகதைகளின் பொதுவான ஒரு கருப்பொருளாக இருந்து வருகிறது. 1947 ஆம் ஆண்டு பனிப்போர் தொடங்கி 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்துக்கு அணு ஆயுதங்கள் பரவியதும், அதைத் தொடர்ந்து பல நாடுகள் அவற்றை கையகப்படுத்தியதும், மூன்றாம் உலகப் போரின் ஆபத்து அதிகரிக்க காரணமாயிற்று. பனிப்போரின் போது, உலகெங்கிலும் உள்ள இராணுவ மற்றும் குடிமைப் பணியாளர்களால் இந்த சாத்தியக்கூறு எதிர்பார்க்கப்பட்டு, வழக்கமான போர் முதல் முழுமையான அணு ஆயுதப் போர் வரையிலான சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டிருந்தன. முழு அளவிலான அணு ஆயுதப் போரானது மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் அழித்துவிடும் என்ற இரு தரப்புக்கும் உறுதியான அழிவு என்ற கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அணு ஆயுதப் போர் ஏற்படும் சாத்தியமிருந்த போர்களில் கொரியப் போர், 1961 பெர்லின் நெருக்கடி, 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி, 1973 யோம் கிப்பூர்ப் போர் ஏபிள் ஆர்ச்சர் 83 ஆகியவை அடங்கும்.

1991 ஆம் ஆண்டு பனிப்போர் முடிவடைந்ததிலிருந்து, பல்வேறு இராணுவ மோதல்கள், குறிப்பாக 2022 முதல் நடந்து வரும் உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பு, மேலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமான தூண்டுதல்களாகக் கருதப்படுகின்றன. [1] [2] [3]

சொற்பிறப்பியல்

[தொகு]

டைம் இதழ்

[தொகு]

"மூன்றாம் உலகப் போர்" என்ற சொல்லை உருவாக்கியதாக இல்லையென்றாலும், இச்சொல்லை துவக்கத்தில் ஏற்றுக் கொண்டது டைம் இதழ் ஆகும். இச்சொல்லின் முதல் பயன்பாடு "தேசிய விவகாரங்கள்" பிரிவில் அதன் நவம்பர் 3, 1941 இதழில் (7, திசம்பர், 1941 அன்று பேர்ள் துறைமுகத்தின் மீதான யப்பானிய தாக்குதலுக்கு முந்தையது) "மூன்றாம் உலகப் போர்" என்ற தலைப்பில் இடம்பெற்றது. அது அமெரிக்காவிற்கு வந்திருந்த நாசி அகதி ஹெர்மன் ரோஷ்னிங் பற்றியதாகும். [4] "மூன்றாம் உலகப் போரின் விதைகளை விதைக்கலாமா வேண்டாமா என்பதை 1943 அல்லது 1944 இல் எப்போதாவது முடிவு செய்வோம்" என்ற அப்போதைய அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஹென்றி ஏ. வாலஸின் கூற்றுகளைப் பற்றி, 22, மார்ச், 1943 அன்று வெளியான "வெளிநாட்டுச் செய்திகள்" பிரிவின் கீழ், டைம் இதழ் அதே தலைப்பான "மூன்றாம் உலகப் போர்?" என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்தியது. [5] [6] 1944, [7] [8] 1945, [9] [10] 1946 ("பாக்டீரியா போர்"), [11] 1947, [12] 1948 [13] ஆகிய தசாப்தங்களின் எஞ்சிய காலகட்டங்களில் "மூன்றாம் உலகப் போர்" என்ற வார்த்தையை டைம் தொடர்ந்து குறிப்பிட்டது. எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு "மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்" என்ற தலைப்பிலான புத்தக விமர்சனத்தில், இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில் டைம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. [14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "This Is What World War III Will Look Like" (in en). Time. 2015 இம் மூலத்தில் இருந்து 29 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200329011526/https://time.com/3934583/world-war-3/. 
  2. Is this the start of World War III?, Deutsche Welle, May 10, 2022, archived from the original on 11 October 2022, retrieved 2022-10-11
  3. Jamie Dimon says World War III may have already begun, Fortune, October 29, 2024
  4. "Foreign News: World War III?". Time. 3 November 1941. Archived from the original on 15 October 2017. Retrieved 12 August 2017.
  5. "Foreign News: World War III?". Time. 22 March 1943. Archived from the original on 15 October 2017. Retrieved 12 August 2017.
  6. "International: Or Else?". Time. 15 February 1943. Archived from the original on 20 May 2019. Retrieved 12 August 2017.
  7. "Germany: For World War III". Time. 5 June 1944. Archived from the original on 18 May 2019. Retrieved 12 August 2017.
  8. "Science: World War III Preview?". Time. 10 July 1944. Archived from the original on 20 May 2019. Retrieved 12 August 2017.
  9. "Letters, Oct. 1, 1945". Time. 1 October 1945. Archived from the original on 20 May 2019. Retrieved 12 August 2017.
  10. "Policies & Principles: Morgenthau's Hope". Time. 15 October 1945. Archived from the original on 19 May 2019. Retrieved 12 August 2017.
  11. "Science: World War III Preview". Time. 25 March 1946. Archived from the original on 20 May 2019. Retrieved 12 August 2017.
  12. "Medicine: Germs for World War III?". Time. 29 December 1947. Archived from the original on 19 May 2019. Retrieved 12 August 2017.
  13. "The Nations: The Chances of World War III". Time. 15 March 1948. Archived from the original on 20 May 2019. Retrieved 12 August 2017.
  14. "Security: This Is What World War III Will Look Like". Time. 30 June 2015. Archived from the original on 13 August 2017. Retrieved 12 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_உலகப்_போர்&oldid=4227188" இலிருந்து மீள்விக்கப்பட்டது