மூன்றாம் அமோகவர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூன்றாம் அமோகவர்சன் (Amoghavarsha III ஆட்சிக்காலம் 934–939) இவன் கன்னடத்தில் பத்திகா என்று அழைக்கப்படுகிறான். நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த இவன் மூன்றாம் இந்திரனின் தம்பியாவான். இவன் ஆந்திரத்தின் வேமுலவாட மன்னனான அரிகேசரி என்பவனின் கூட்டமைப்பு படைகளின் உதவியுடன் நான்காம் கோவிந்தனுக்கு எதிராக புரட்சிசெய்து ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சியைப்பற்றி அதிகமாகத் தெரியவில்லை.இவனது வயது முதிர்ச்சியின் காரணமாக நிர்வாகத்தில் ஆர்வம் காட்டாததால் இவனது மகன் மூன்றாம் கிருஷ்ணன் ஆட்சியைக் கவனித்துவந்தான்.[1] அமோகவர்சனின் பட்டத்தரசி குந்தகாதேவி ஆவாள், இவள் காளச்சூரிய மரபின் இளவரசியாவாள். இவனது மகளை மேலைக் கங்கர் மரபின் இரண்டாம் பூதுகனுக்கு மணம் செய்வித்தனர். [2]

மேற்கோள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Kamath (2001), p82
  2. Reu (1933), p82
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_அமோகவர்சன்&oldid=2487934" இருந்து மீள்விக்கப்பட்டது