மூத்த குடிமக்கள்
மக்களை வயது மூப்பின் அடிப்படையில் மூத்த குடிமக்கள் (Senior citizens) என வகைப்படுத்துகின்றனர். மூத்தகுடி மக்களுக்கான வயது கணக்கீடு செய்வதில் நாட்டிற்கு நாடு வேறுபாடு உள்ளது. மூத்தகுடி மக்களின் நலன்களுக்காக பல நாடுகள் ஓய்வூதியம், மருத்துவம், முதியோர் உறைவிடம், வரிச்சலுகைகள், பயணக்கட்டணச் சலுகை, சமூகப்பாதுகாப்பு போன்ற பல்வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றது. மூத்தகுடி மக்களின் நலனை பேணுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 -ஆம் நாள் ”சர்வதேச மூத்தகுடி மக்கள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.[1][2] மூத்தகுடி மக்களான பெற்றோர்களின் நலன்களை காத்திட, இந்திய நடுவன் அரசும் மாநில அரசுகளைகளும் பல்வேறு சட்டங்களை கொண்டுவந்துள்ளது.[3] [4].[5]
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான வயது கணக்கீடு
[தொகு]இந்தியாவில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். ஆனால் சில இனங்களில் சலுகைகள் வழங்கும் போது ஆண், பெண் மூத்தகுடி மக்களுக்கான வயது வரம்பு வேறுபடுகிறது.
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்
[தொகு]இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பலதுறைகள் வாயிலாக பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. ஆனால் சில இனங்களில் சலுகைகள் வழங்கும் போது ஆண், பெண் மூத்தகுடி மக்களுக்கான வயது வரம்பு வேறுபடுகிறது.[6]
- ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசு மாதாந்திர ஓய்வூதியமாக ரூபாய் ஆயிரம் வழங்குகிறது.[7]
- ஆதரவற்ற மூத்த குடிமக்களின் குடும்ப அட்டைகளுக்கு ரேசன் கடைகளில் மாதா மாதம் 10 கிலோ அரிசியும், பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகளும் வழங்கும் திட்டமுள்ளது.[8]
- ரூபாய் இரண்டரை இலட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டும் மூத்தகுடி மக்கள் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. எண்பது வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் (Super Senior Citizens), ஐந்து இலட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வருமான வரி செலுத்த தேவையில்லை.[9][10][11]
- ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அரசு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்குகிறது.
- இரயில் வண்டியில் பயணிக்கும் மூத்தகுடி ஆண் பயணிகளுக்கு, பயணக்கட்டணத்தில் நாற்பது விழுக்காடும், மூத்தகுடி பெண் பயணிகளுக்கு ஐம்பது விழுக்காடும் கட்டணச் சலுகை வழங்குகிறது இந்தியன் இரயில்வே துறை.[12][13]
- மூத்த குடிமக்களின் அவசர உதவிக்கென இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா அழைப்புடன் கூடிய தனி தொலைதொடர்பு எண்கள் 1800-180-1253. 1800 – 180- 1253 மற்றும் 1298 இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இந்த எண் மூலம் தொடர்பு கொண்டால், உரிய அரசு ஊழியர்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவன ஊழியர்கள், மூத்த குடிமக்களின் அவசர உதவிக்கு வருவார்கள்.[14]
- அரசு பொதுத்துறையில் இயங்கும் உள்நாட்டு இந்திய விமானங்களில் பயணிக்கும் 65 வயது நிரம்பிய ஆண்களுக்கும், 63 வயது நிரம்பிய பெண் மூத்த குடிமக்களுக்கும், சாதாரண வகுப்பு பயணக்கட்டணத்தில் ஐம்பது விழுக்காடு கட்டணச்சலுகை வழங்குகிறது.[12][15]
- வெளிநாடு செல்லும் மூத்த குடிமக்களுக்கு (ஆண்கள் வயது 65 – பெண்கள் வயது 63), சாதாரண வகுப்பு விமானப் பயணக் கட்டணத்தில் ஐம்பது விழுக்காடு கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.[12][15]
- மூத்த குடிமக்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்கவும், இலவச சட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு அரை விழுக்காடு வட்டி கூடுதலாக வழங்குகிறது.
- மூத்த குடிமக்கள் தங்கும் முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கு, கட்டுமானத் தொகையில் ஒன்றிய அரசு 90 விழுக்காடு மானியம் வழங்குகிறது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://socialjustice.nic.in/interdayop.php International Day of Older Persons
- ↑ http://www.thehealthsite.com/diseases-conditions/international-day-of-older-persons-living-old-age-with-dignity/?gclid=CJunr9DvqL8CFVQnjgodvF8AkA பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் International Day of Older Persons
- ↑ http://socialjustice.nic.in/oldageact.php சமூக நீதிக்கான ஒன்றிய அரசின் சட்டம்
- ↑ http://socialjustice.nic.in/careofperson.php BENEFITS EXTENDED BY OTHER CENTRAL MINISTRIES FOR THE WELFARE OF SENIOR CITIZENS
- ↑ http://delhi.gov.in/wps/wcm/connect/090b9400440bb07ebfe5bf24a04cfff1/Rules+under+Maintenance+%26+Welfare+of+Parents+%26+Senior+Citizen+Act,2007.pdf?MOD=AJPERES&lmod=-1787627201&CACHEID=090b9400440bb07ebfe5bf24a04cfff1 பரணிடப்பட்டது 2014-04-11 at the வந்தவழி இயந்திரம் தில்லி அரசின் சட்டம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-07-02.
- ↑ http://www.tn.gov.in/scheme/data_view/43982
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-02.
- ↑ https://in.finance.yahoo.com/news/tax-benefits-for-senior-citizens-035344631.html
- ↑ http://taxguru.in/income-tax/tax-benefits-for-senior-citizens.html
- ↑ http://abcaus.in/articles/senior-citizen-income-tax-act.html
- ↑ 12.0 12.1 12.2 http://www.seniorindian.com/travel_concessions_seniors(army).htm
- ↑ http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/traffic_comm/pdf/Facility_Sr_Citizen.pdf
- ↑ http://timesofindia.indiatimes.com/city/bangalore/24-hour-helpline-opens-for-the-elderly/articleshow/1944578128.cms
- ↑ 15.0 15.1 http://www.airindia.com/senior-citizen-concession.htm
- ↑ http://socialjustice.nic.in/consd.php
வெளி இணைப்புகள்
[தொகு]- Elders dial for help
- facility for the aged to be extended பரணிடப்பட்டது 2008-10-27 at the வந்தவழி இயந்திரம்
- Senior Citizens in India: Benefits and Facilities பரணிடப்பட்டது 2013-11-26 at the வந்தவழி இயந்திரம்
- http://www.thehindu.com/search/simple.do;jsessionid=D21935314174D7F915059086F7FF8818.route04
- பட்ஜெட் 2014: மூத்தக் குடிமக்களுக்கான நலத்திட்டம் அறிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு]