மூட்டுறை திரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூட்டு மாதிரி
மூட்டுறை திரவம்

மூட்டுறை திரவம் (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் நியூட்டன் வகையிலாப் பிசுப்பு திரவமாகும். அசையும்போது நீர்ம மூட்டுக் குருத்தெலும்புகளுக்கிடையில் ஏற்படும் உராய்வினைக் குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான பணியாகும்.

வகைப்பாடு[தொகு]

மூட்டுறை திரவத்தை சாதாரணமானவை, அழற்சியல்லாலாதவை, அழற்சியானவை, சீழ் பிடிப்பவை, இரத்தக்கசிவானவை என்று வகைப்படுத்தலாம் :

பெரியவர்களின் முட்டி மூட்டுகளில் காணப்படும் மூட்டுறை திரவத்தின் வகைப்பாடு
இயல்பானது அழற்சியல்லாலாதவை அழற்சியானவை சீழ் பிடிப்பவை இரத்தக்கசிவானவை
கொள்ளளவு (மிலி) <3.5 >3.5 >3.5 >3.5 >3.5
கூழ்மநிலை அதிகம் அதிகம் குறைவு கலந்தது குறைவு
தெளிவு தெளிவானது தெளிவானது கலங்கியது மங்கலானது கலந்தது
நிறம் வண்ணமற்றது/வைக்கோல் நிறம் வைக்கோல் நிறம்/மஞ்சள் மஞ்சள் கலந்தது சிவப்பு
வெள்ளையணுக்கள்/ மிமீ3 <200 <2,000[1] 5,000[1]-75,000 >50,000[1] இரத்த அளவு
பல்கூறுகளாலான நியூட்ரோஃபில் (%) <25 <25[1] 50[1]-70[1] >70[1] இரத்த அளவு
கிராம் நிறமூட்டல் (Gram stain) எதிர்மை எதிர்மை எதிர்மை பொதுவாக ஏற்பு எதிர்மை

நோயியல்[தொகு]

நீர்ம மூட்டு

பல்வேறு மூட்டுறை திரவ வகைகளும் குறிப்பிடத்தக்க நோயறிதல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன:[2][3]

 • அழற்சியல்லாலாதவை (தொகுதி I)
  • முதுமை மூட்டழற்சி (Osteoarthritis), மூட்டுஅழுகல் நோய்
  • பேரதிர்ச்சி (Trauma)
  • வாதக் காய்ச்சல்
  • நாள்பட்ட கீல்வாதம் (chronic gout) அல்லது போலியான கீல்வாதம் (pseudogout)
  • தோல் தடிப்பு (Scleroderma)
  • பல்தசையழற்சி (Polymyositis)
  • மண்டலிய செம்முருடு (சிஸ்டமிக் லூபஸ் எரிதிமாடோசஸ்; Systemic lupus erythematosus)
  • செந்தடிப்புக் கண்டு (Erythema nodosum)
  • நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய் (Neuropathic arthropathy) (சாத்தியமான இரத்தக்கசிவுடன்)
  • அரிவாள் சிவப்பணு இரத்தசோகை (Sickle-cell disease)
  • ஈமோகுரோம் நோய் (Hemochromatosis)
  • மாகரபாதம் (Acromegaly)
  • தசையில் மாவுப் பொருள் ஏற்றம் (Amyloidosis)
 • அழற்சியானவை (தொகுதி II)
 • சீழ் பிடிப்பவை (தொகுதி III)
  • சீழ் உருவாக்கும் பாக்டீரிய நோய்த்தொற்று (Pyogenic bacterial infection)
  • அழுகும் வாதம் அல்லது சீழ்வாதம் (Septic arthritis)
  • இரத்தக்கசிவு
  • பேரதிர்ச்சி
  • கட்டிகள்
  • இரத்த ஒழுக்கு நோய் அல்லது குருதி உறையாமை (Hemophilia) / குருதி திரள் பிறழ்வு (coagulopathy)
  • அரிநோய் (Scurvy) - உயிர்ச்சத்து சி பற்றாக்குறை நோய்
  • நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Table 6-6 in: Elizabeth D Agabegi; Agabegi, Steven S. (2008). Step-Up to Medicine (Step-Up Series). Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins. ISBN 0-7817-7153-6. 
 2. Lupus Anticoagulant
 3. American College of Rheumatology

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்டுறை_திரவம்&oldid=1898546" இருந்து மீள்விக்கப்பட்டது