மூடிய கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூடிய கடல் (Mare clausum) என்பது பன்னாட்டுச் சட்டப்படி, ஒரு நாட்டின் சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு கடல், அல்லது பெருங்கடல், அல்லது பயணம் செய்யத்தக்க நீர் பகுதி மூடப்பட்டு இருப்பது அல்லது மற்ற நாடுகளால் அணுக முடியாமல் இருப்பதை குறிக்கின்றது. மூடிய கடல் என்பது விதிகளற்ற கடலுக்கு( mare liberum) விதிவிலக்கு. இதற்குப் பொருள், அனைத்து நாடுகளும் கப்பல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரு கடல் ஆகும்[1][2]. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்னாட்டு நீர் கொள்கைப்படி, பெருங்கடல்கள்[தொடர்பிழந்த இணைப்பு], கடல்கள், தேசிய அதிகாரத்திற்கு வெளியே உள்ள நீர், இவை எல்லாம் கப்பல் பயணம் செய்ய திறந்துவிடப்பட்டிருக்கும், இதற்குப் பெயர், உயர்ந்த கடல் அல்லது விதிகளற்ற கடல் என்பதாகும். போச்சுகல், எசுப்பானிய அரசுகள் கண்டுபிடிப்புகளின் காலத்தில் மூடிய கடல் கொள்கையை ஆதரித்தன[3]. ஆனால் விரைவில் மற்ற ஐரோப்பா நாடுகள் இதற்கு அறைகூவல் விட்டன.

வரலாறு[தொகு]

கி.மு. 30 முதல் கி.பி 117 வரை நடுவண் தரைக் கடலை சுற்றி வளைத்து பெரும்பான்மையான துறைமுகங்களை இரோமப் பேரரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உரோமானியர்கள் இக்கடலுக்கு நமது கடல் என்று பெயர் வைக்கத் தொடங்கினார்கள்[4]. அக்காலத்தில் நவம்பருக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலம் கப்பல் பயணம் செய்ய மிகவும் இடரானது என்று கருதப்பட்டது, அதனால் அப்பொழுது மூடிய கடல் என்று அறிவிக்கப்பட்டது, எனினும் கடல் பயணம் செய்ய தடையேதும் இல்லை. பழங்காலச் சட்டப்படிநாடுசார்ந்து பெருங்கடல் வரையரையறுக்கப்படவில்லை[5]. எனினும் இடைக் காலத்திலிருந்து கடற்பயணக் குடியரசுகளான வெனிசு குடியரசும் செனோவா குடியரசும் நடுவண் தரைக் கடலில் மூடியகடல் கொள்கைக்கு உரிமை கோரின. நார்டிக் முடியரசும் இங்கிலாந்தும் கூட தங்கள் நெருங்கிய கடல் பகுதிகளில் செல்வழிக் கட்டணம், மீன் பிடிக்கத் தனித்தன்னுரிமை கோரி, வெளிநாட்டுக் கப்பல்களுக்குத் தடை விதித்தன.

கண்டுபிடிப்புகளின் காலத்தில் மூடியகடல்[தொகு]

கண்டுபிடிப்புகளின் காலத்தில், 15 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளின் இடையில், கடலோரமாக இருந்த கப்பல் பயணம் பெருங்கடல் பயணமாக மாறியது. ஐபீரியன் தீவகத்திலுள்ள நாடுகள் இந்தச் செயல்முறையில் முன்னோடிகளாக, கண்டுபிடித்த, கண்டுபிடிக்க போகும் நிலங்களின் மீது சிறப்புச்சொத்து முற்றாட்சி உரிமையை வேண்டின. புதிய நிலங்களின் இருப்பு, சொத்துக்களின் குவிப்பின் விளைவாக, போச்சுகல் முடியாட்சி, ஐக்கிய குடியரசின் காச்டில், அரகாம் ஆகியவை வெளிப்படையாக போட்டிப் போட தொடங்கின. பகைமையை தவிர்க்கும் பொருட்டு, 1479-இன் அல்ககோவாச் ஒப்பந்தத்திலும் 1494-இன் தோர்டிசிலா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.

16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டிகளில் ஸ்பெயின் பசிபிக் பெருங்கடலை மூடிய பெருங்கடலாக கருதின, மற்ற கப்பற்படைகளுக்கு இது மூடிய கடல் ஆகும். பசிபிக் பெருங்கடலின் மேற்கே டச்சுப் படைகள் அச்சுறுத்தின.

கண்டுபிடிப்புகளின் கால மூடியஐபேரியக் கடல்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Robert McKenna, "The Dictionary of Nautical Literacy", p.225 McGraw-Hill Professional, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-141950-0
 2. Gabriel Adeleye, Kofi Acquah-Dadzie, Thomas J. Sienkewicz, James T. McDonough, "World dictionary of foreign expressions: a resource for readers and writers", p.240, Bolchazy-Carducci Publishers, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86516-423-1
 3. The licensing of vessels by the Portuguese was initiated by Prince Henry the Navigator in 1443, after Prince Pedro granted him the monopoly of navigation, war and trade in the lands south of Cape Bojador. Later this law would be enforced by the Bulls Dum Diversas (1452) and Romanus Pontifex (1455), more buls and treaties followed, the most significant being the Treaty of Tordesillas.
 4. Tellegen-Couperus, Olga (1993). Short History of Roman Law, p.32. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-07251-4.
 5. Conrad Gempf, "The Book of Acts in Its Graeco-Roman Setting", p.23, Volume 2, Wm. B. Eerdmans Publishing, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-4847-8

நூல்தொகை[தொகு]

 • Anand Prakash, "Origin and development of the law of the sea: history of international law revisited," Brill, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-247-2617-4
 • Tuck, Richard, Natural rights theories: their origin and development, Cambridge University Press, 1981, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-28509-7
 • Ferreira, Ana Maria Pereira, O Essencial sobre Portugal e a Origem da Liberdade dos Mares, Lisboa, Imprensa Nacional Casa da Moeda, [sd] (Basics of Portugal and the Origin of Freedom of the Seas, in Portuguese).
 • Merêa, Paulo, "Os Jurisconsultos Portugueses e a Doutrina do "Mare Clausum"", Revista de História, nº 49, Lisboa, 1924 ("The Jurists and the Doctrine of the Portuguese" "Mare clausum", Journal of History, in Portuguese)
 • Saldanha, António Vasconcelos de, "Mare Clausum" Dicionário de História dos Descobrimentos Portugueses, vol. II, pp. II, pp. 685–86 (Dictionary of the History of Discoveries, in Portuguese).
 • van Ittersum, Martine Julia (2006). Hugo Grotius, Natural Rights Theories and the Rise of Dutch Power in the East Indies 1595–1615. Boston: Brill. hallo
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடிய_கடல்&oldid=3874067" இலிருந்து மீள்விக்கப்பட்டது