மூச்சுக் குழாய் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூச்சுக் குழாய் புற்றுநோய் (Tracheal cancer) என்பது மூச்சுக் குழாயின் உள்சுவரில் தோன்றும் புற்றுநோயாகும். இந்நோய், 40 முதல் 60 வரையிலான ஆண் பெண் இரு பாலரிடமும் ஒரே அளவில் காணப்படுகிறது. இப்புற்றுநோய் அதிகமாகத் தட்டைப்படை உயிரணுக்களால் ஆனது. இந்நோய், மிகவும் அரிதாகவே காணப்படுகிறது [1]. பத்து லட்சத்தில் இருவருக்கே இந்நோய் தோன்றும் வாய்ப்புள்ளது. மூச்சுக் குழாய் என்பது குரல்வளைக்கும் நுரையீரல் இரண்டாகப்பிரியும் இடத்துக்கும் இடையிலான பகுதியாகும். உறுதியான குருத்தெலும்பு வளையங்களால் ஆன ஒரு குழாய்போல் உள்ளது. இக்குழாயில் தோன்றும் கட்டிகள்கூடப் புற்றாக மாற அதிக வாய்ப்புள்ளன. 15% நோயாளிகளே மூன்று வருடம் வாழ்கின்றனர். இந்நோயை வகைப்படுத்துவது பொதுவாக மற்ற புற்றுநோய்களைப் போன்றதேயாகும்.

நோய்க்கான காரணிகள்[தொகு]

நோய்க்கான காரணிகளாகப் புகைத்தல், சுகாதாரமற்ற வாழ்விடம், வேதிப்பொருட்கள் ஆகியவை உள்ளன.

நோய்க்கான அறிகுறிகள்[தொகு]

மூச்சுவிடுவதில் சிரமம், வறட்டு இருமல், சளியுடன் இரத்தம் கலந்து வெளிப்படுவது (haemoptysis), குரலடைப்பு, அடிக்கடித் தொற்றுநோய் முதலியன சில அறிகுறிகளாகும். இந்நோய்க் காரணமாகச் சில சமயங்களில் உணவு உட்கொள்வதில் துன்பம் ஏற்படும்.[2]

நோய்க் கண்டறிதல்[தொகு]

எக்சு-கதிர் ஆய்வு, சி.டி வரைவு, எம். ஆர். ஐ வரைவு, உள்நோக்கியியல் போன்ற பல ஆய்வுகள் நோய்க்காணலில் உதவுகின்றன.

மருத்துவம்[தொகு]

ஆரம்ப நிலையில் கண்டு மருத்துவம் மேற்கொண்டால் பலன் அதிகமாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zayed Y, Tariq MA, Chandran AV. Tracheal Cancer. 2021 Feb 9. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2021 Jan–. PMID: 30860706.
  2. Abbate G, Lancella A, Contini R, Scotti A. A primary squamous cell carcinoma of the trachea: case report and review of the literature. Acta Otorhinolaryngol Ital. 2010 Aug;30(4):209. PMID: 21253287; PMCID: PMC3008146.
  3. Mornex F, Coquard R, Danhier S, Maingon P, El Husseini G, Van Houtte P. Role of radiation therapy in the treatment of primary tracheal carcinoma. Int J Radiat Oncol Biol Phys. 1998 May 1;41(2):299-305. doi: 10.1016/s0360-3016(98)00073-x. PMID: 9607345.