மூசாக்கேல் மாவட்டம்
மூசாக்கேல் மாவட்டம்
ضلع موسی خیل موسی خېل ولسوالۍ موسی خݔل دمگ | |
|---|---|
மாவட்டம் | |
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடி | |
| மாகாணம் | |
| கோட்டம் | லோரலாய் |
| தலைமையிடம் | மூசாக்கேல் பஜார் |
| அரசு | |
| • வகை | மாவட்ட நிர்வாகி (துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 5,728 km2 (2,212 sq mi) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 1,82,275 |
| • அடர்த்தி | 32/km2 (82/sq mi) |
| • நகர்ப்புறம் | 15,805 |
| • நாட்டுப்புறம் | 1,66,470 |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 84700 |
மூசாக்கேல் மாவட்டம் (Musakhel District)[3], பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். பலூசிஸ்தான் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்த மூசாக்கேல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மூசாக்கேல் பஜார் என்பதாகும். மூசாக்கேல் பஜார் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு வடகிழக்கே 404.2 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெமேற்கே 563.2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]மூசாக்கேல் மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் கைபர் பக்துன்வா மாகாணம், தென்கிழக்கில் பார்கான் மாவட்டம், தென்மேற்கில் தூகி மாவட்டம், மேற்கில் ஜோப் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]
மூசாக்கேல் மாவட்டம் 5 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[5] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| தாரூக் வட்டம் | 301 | 21,792 | 72.40 | 65.37% | ... |
| கிங்கிரி வட்டம் | 3,683 | 33,618 | 9.13 | 45.37% | ... |
| மூசாக்கேல் பஜார் வட்டம் | 658 | 49,809 | 75.70 | 34.51% | ... |
| தியார் எஸ்சோட் வட்டம் | ... | ... | ... | 24.71% | ... |
| தோய்சர் வட்டம் | 539 | 56,818 | 105.41 | 26.06 | ... |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மூசாக்கேல் மாவட்ட மக்கள் தொகை 1,82,275 ஆகும்.[6]
சமயங்கள்
[தொகு]இசுலாம் சமயத்தை 99.63% மகக்ளும், இந்து மற்றும் கிறித்துவ சமயத்தை 494 (0.27%) மக்களும் பின்பற்றுகின்றனர்.[1]
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 85.83%, பலூச்சி மொழி 12% மற்றும் பிற மொழிகளை 2.17% மக்களும் பேசுகின்றனர்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ Correspondent, The Newspaper's Staff (2021-06-30). "New division, two districts created in Balochistan". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2021-06-30.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.