மூங்கில் லெமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூங்கில் லெமூர்கள்[1]
Golden Bamboo Lemur
(Hapalemur aureus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
துணைவரிசை: Strepsirrhini
குடும்பம்: Lemuridae
பேரினம்: Hapalemur
I. Geoffrey, 1851
மாதிரி இனம்
Lemur griseus
É. Geoffroy, 1812
( = Lemur griseus Link, 1795)
இனம்

Hapalemur griseus
Hapalemur occidentalis
Hapalemur meridionalis
Hapalemur alaotrensis
Hapalemur aureus

வேறு பெயர்கள்
  • Hapalolemur Giebel, 1855
  • Myoxicebus Elliot, 1913

மூங்கில் லெமூர் என்பது லெமூர் இனத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர அளவிலான முதனி. இவை மற்ற லெமூர்களைப் போலவே மடகாட்கர் தீவை தாயகமாகக் கொண்டவை.

இது சாம்பல் பழுப்பு நிறத்திலான ரோமத்தினைக் கொண்டிருக்கும். காதுகள் வட்டமாகவும் முடிகளுடனும் இருக்கும். 26-46 செ.மீ நீளமும் 2.5 கிலோ வரை எடையும் இருக்கும். இவை மூங்கில் காடுகள் இருக்கும் இடங்களிலேயே வாழ்கின்றன. மூங்கில் லெமூர் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்பதால் இவை மூங்கில் லெமூர் என்று அழைக்கப்படுகின்றன.

மூங்கில் லெமூர் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். இதன் சினைக்காலம் 135 - 150 நாட்களாகும். இவை 12 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 116-117. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_லெமூர்&oldid=2190964" இலிருந்து மீள்விக்கப்பட்டது