மூங்கில் கோழிக்கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூங்கில் கோழி சமைக்கப்படுகிறது

மூங்கில் கோழிக்கறி (Bamboo chicken) என்பது நாட்டுக்கோழிக்கறி அல்லது வெள்ளைக்கோழிக்கறியை மூங்கிலின் இரண்டு கணுக்களின் இடைப்பட்ட உருளை பகுதியில் மசாலா கலவையுடன் திணித்து நெருப்பில் எண்ணெய் இல்லாமல் சமைக்கும் கறியே மூங்கில் கோழிக்கறி ஆகும்.


தோற்றம்[தொகு]

இது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டப் பகுதியில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு மலைப்பகுதி மக்களின் உணவு வகை ஆகும்.[1]

மூங்கில் கோழிக்கறி

தேவையான பொருள்கள்[தொகு]

  1. தோல் நீக்கிய கோழிக்கறி சிறு சிறு துண்டுகளாக வெட்டியது,
  2. நறுக்கிய வெங்காயம்,
  3. நறுக்கிய பச்சை மிளகாய்,
  4. இங்சி பூண்டு விழுது
  5. பட்டை இலவங்கம் கசகசா மல்லி ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்,
  6. தேவையான அளவு உப்பு.

செய்முறை[தொகு]

கறி மற்றும் மசாலாக்கலவையை நன்கு கலந்து கொள்ளவும் தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்க்கலாம், இந்த கலவையை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மூங்கிலின் ஒரு பக்கம் கணுவும் மறுபக்கம் திறந்தும் உள்ளபடி வெட்டிக்கொள்ளவும், திறந்த பக்கம் வழியாக ஊறிய கறிக் கலவையை திணிக்கவும், திறந்த பகுதியை வாழை இலை கொண்டு மூடவும். இந்த மூங்கிலை நெருப்பின் மீது வைத்து 45 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும். சுவையான மூங்கில் கோழிக்கறி தயார். எண்ணெய் இல்லாமச் சமைப்பது இதன் சிறப்பு.[2]

சான்றுகள்[தொகு]

((reflist))

  1. This dish is prepared by tribal people of India.
  2. Posted by md zakirabegum mohammed a (2014-01-30). "DELICIOUS FOOD : How to make bamboo chicken". Zaakira786-tastyfoods.blogspot.com. பார்த்த நாள் 2016-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_கோழிக்கறி&oldid=2472154" இருந்து மீள்விக்கப்பட்டது