மூங்கில் குடுக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூங்கில் குடுக்கை என்பது தமிழக மலைவாழ் மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் விதத்தில் மூங்கிலால் உருவாக்கிக்கொண்ட ஒரு ஒலி எழுப்பும் பாரம்பரிய கருவியாகும். இந்தக் கருவி யானை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகளிடம் இருந்து மலைவாழ் மக்களைச் சிறப்பாக பாதுகாக்கிறது.

அமைப்பு[தொகு]

இந்த மூங்கில் உடுக்கை மூன்று அடியில் இருந்து நான்கு அடி நீளம் கொண்டதாக மூங்கிலில் செய்யப்படுகிறது. மூங்கிலின் ஒரு பாதியின் நடுப்பகுதி வெட்டப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள மறு பகுதி சரிபாதியாக வெட்டப்பட்டு இருக்கும் விதத்தில் இருக்கும். இவற்றை அசைக்கும்போது எழும் ஓசை 100 மீட்டர் சுற்றளவுக்கு மேல் காடுகளுக்குள் கேட்கும் இதனால் வன விலங்குகள் எதுவும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளை நெருங்காது. இந்த மூங்கில் கருவிகளைப் பழமை அழியாமல் ஆவணப்படுத்தும் முயற்சியை ஐ.நா. கலாச்சார அமைப்பான யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_குடுக்கை&oldid=2127355" இருந்து மீள்விக்கப்பட்டது