மூக்கு நோண்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்கு நோண்டுதல்
ஒரு மனிதன் மூக்கை நோண்டுகிறார்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F98.8

மூக்கு நோண்டுதல் என்பது மூக்கில் விரலை நுழைத்து மூக்குச்சளியை சுரண்டி எடுப்பதைக் குறிக்கும். மூக்குச்சளியை சுரண்டி சாப்பிடுவதையும் குறிக்கலாம்.

உலகின் பல கலாச்சாரங்களில், பொது இடங்களில் மூக்கு நோண்டுவது கண்டனம் செய்யப்படுகிறது. ஆனாலும், சில மதிப்பீட்டுகளின் படி, சராசரியாக மனிதன் ஒரு நாளுக்கு நான்கு தடவை மூக்கை நோண்டுகிறார் என்று அறியப்படுகிறது. 1995இல் செய்த ஒரு கணக்கெடுப்பின் படி 91 சதவிகித மக்கள் மூக்கை நோண்டுகின்றனர்.

மூக்கில் பல நுண்ணுயிர்கள் வசிக்கின்றன. இதனால், நோயுற்ற மக்கள் மூக்கை நோண்டினால் உடனடியாக கைகளை அலம்பவேண்டும். ஆனால், நோய் இல்லாத மக்கள் மூக்கை நோண்டி மூக்குச்சளியை சாப்பிட்டுவிட்டால் நோய் எதிர்ப்பாற்றல் முறைமைக்கு நல்லது என்று சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கு_நோண்டுதல்&oldid=2746360" இருந்து மீள்விக்கப்பட்டது