மூக்கறு போர்
மூக்கறு போர் இது திண்டுக்கல்லில் மைசூர் நாட்டின் அரசர் கந்தீரவன் படையினருக்கும், மதுரை திருமலை நாயக்கரின் படையினருக்கும் நடந்த போரைப்பற்றியது.
நிகழ்வு
[தொகு]கந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித்து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவியினால் கந்தீரவன் படை வீரர்கள் திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து கட்டி மைசூர் மன்னரிடம் தக்க பரிசு பெற்றனர். பதிலடியாக திருமலை நாயக்கரின் ஏவலின் பேரில் திருமலை நாயக்கரின் படைவீரர்கள், கள்ளர் மரபை சேர்ந்த திருமலையின் தளபதி பின்னத்தேவரும், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர்.[1] [2] திருமலை நாயக்கர் பின்னத்தேவருக்கு மூக்குப்பரி என்கிற பட்டத்தை வழங்கினார்[3][4]
மூக்கறு போர் மண்டபம்
[தொகு]இந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மதுரைத் திருமலை நாயக்கன் (1625-59)". Archived from the original on 2022-11-12. Retrieved 2012-01-03.
- ↑ http://www.ourkarnataka.com/Articles/starofmysore/cnose.htm
- ↑ "மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/madurai-landmarks-sethupathi-mandapam-and-its-painful-history.
- ↑ "King Thirumalai Nayak and the Kallar connection". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/king-thirumalai-nayak-and-the-kallar-connection/article32431472.ece.