மு. வெங்கடசுப்பா ராவ்
Appearance
சர் முத்த வெங்கடசுப்பா ராவ் (M. Venkatasubba Rao)(18 சூலை 1878 - 30 திசம்பர் 1960) என்பவர் இந்திய வழக்கறிஞர், பரோபகாரர், சமூகவாதி மற்றும் நிர்வாகி ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பேரர் முகவராகவும் பணியாற்றினார்.
இளமையும் கல்வியும்
[தொகு]வெங்கடசுப்பா ராவ் 1878ஆம் ஆண்டு சூலை 18ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஆகிவீடு கிராமத்தில் பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
பணி
[தொகு]தனது கல்வியை முடித்ததும், வெங்கடசுப்பா ராவ் சிவி குமாரசாமி சாத்திரியிடம் இளைய வழக்குரைஞராக பயிற்சிபெற்றார். 1903ஆம் ஆண்டில், இவர் சொந்தமாகப் பயிற்சி செய்யத் தொடங்கினார் மற்றும் 1 நவம்பர் 1921 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பியூஸ்னே நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார்.[1]