உள்ளடக்கத்துக்குச் செல்

மு. விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. விஜயகுமார் (பிறப்பு: ஏப்ரல் 10, 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தந்தை க. முத்துக்கண்ணு, தாய் கே. லலிதாம்பாள். திரைப்படத் தொழிலுக்கும், வீட்டுப் பயன்பாட்டிற்கும் தேவையான மின்னணுக் கருவிகள் பழுதுபார்ப்பு குறித்து பல தொழில்நுட்ப நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு

[தொகு]

இவர் எழுதிய நூல்களில் இரண்டு நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றிருக்கின்றன.

  1. "டிரான்சிஸ்டர் மற்றும் ஐசி ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் " எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
  1. "நீங்களும் சினிமாவிற்குக் கதை எழுதலாம்" எனும் நூல் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._விஜயகுமார்&oldid=3614085" இலிருந்து மீள்விக்கப்பட்டது