மு. ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. ராஜன் (பிறப்பு: சூன் 11 1966) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். 'முரசுராஜன்' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் கிறிஸ்த்தவ மத போதகருமாவார். மேலும் இவர் மலேசியத் தமிழ் கிறிஸ்த்தவ எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும், மலேசியத் தமிழ் பாவலர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1984 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கிறிஸ்த்தவ சமயக் கட்டுரைகள், சிறுகதைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "இயேசு செய்த அற்புதங்கள்" (2002)
  • "கவிஞர் கண்ட இயேசு" (தொகுப்பு)
  • "குமரிக் கண்ட நாகரிகமும் விவிலியமும்"

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • "இலக்கியத் தென்றல்" விருது (1996) உலகத் தமிழ் கிறிஸ்த்துவ எழுத்தாளர் சங்கம்
  • "இலக்கிய ஒளி" விருது (1996) சென்னை தாய்மண் இலக்கியக் கழகம்
  • "முத்தமிழ் மாமணி" விருது (2002) சென்னை பாரதிதாசன் நினைவுநாள் விழா

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ராஜன்&oldid=3225006" இலிருந்து மீள்விக்கப்பட்டது