மு. முருகேஷ்
![]() | இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. |
மு. முருகேஷ் M.Murugesh | |
---|---|
![]() | |
பிறப்பு | 06.10.1969 திருக்கோகர்ணம் (புதுக்கோட்டை மாவட்டம்) |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | கவிதை, சிறுகதை, ஐக்கூ, சிறுவர் இலக்கியம் |
கல்வி கற்ற இடங்கள் | வந்தவாசி |
விருதுகள் | பல அறக்கட்டளை விருதுகள். |
துணைவர் | அ. வெண்ணிலா |
பிள்ளைகள் | கவின்மொழி, நிலாபாரதி, அன்புபாரதி |
மு. முருகேஷ் (M.Murugesh) முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டும், பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் படைப்பாளியாவார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமத்தில் வாழ்கிறார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
குழந்தை இலக்கியப் படைப்பாளி,[1] கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்துவரும் படைப்பாளியாகவும் தொடர்ந்து இயங்குகிறார்.[2]
அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளைச் சொற்சிக்கனத்தோடு படைப்புகளாக்கி வருவது இவரது இயல்பாகும்.முருகேஷின் படைப்புகளில் இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர்.
முருகேஷ் எழுதிய நூல்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐக்கூவிற்கு ஒரு தனியிடம் உருவாக்குவதற்காக முயன்றவர்களில் முருகேஷும் ஒருவர் எனலாம். தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்திலும் முருகேஷ் பங்களிப்பு செய்துள்ளார்.
கேரள மாநில அரசின் அழைப்பின் பேரில் திருச்சூரில் நடைபெற்ற எழுத்தச்சன் விழாவின் கவிதை வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். 2012-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 2013-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகப் படைப்பாளர்கள் கருத்தரங்கில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்கேற்றார். விசயவாடாவில் இந்திய அரசின் சாகித்திய அகாதமி நடத்திய ‘சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்கும்’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில் பங்கேற்று கட்டுரை வாசித்தார்.
குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரசுகார் விருதுக்காக 2021 ஆம் ஆண்டு கவிஞர் மு.முருகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணத்தில் முருகேஷ் பிறந்தார். இயற்பெயர் மு.முருகேசன். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், பின்னர் தமிழில் இள முனைவராகப் பட்டம் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி அ.வெண்ணிலா தமிழ் இலக்கிய உலகின் முன்னணி கவிஞர், நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு உரியவராவார்.
இலக்கியச் செயல்பாடுகள்
[தொகு]- ஜப்பானிய ஐக்கூ கவிதைகளைத் தமிழக வாசகர் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லும் முயற்சியாக இளைய தமிழ்க் கவிஞர்கள் பலரை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஐக்கூ திருவிழாக்களை நடத்தினார். 'இனிய ஹைக்கூ’ என்ற கவிதைச் சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கி எண்ணற்ற ஐக்கூ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
- பெங்களூரு நகரில் நடைபெற்ற உலக ஐக்கூ மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். மாநாட்டில் நடைபெற்ற உலகம் தழுவிய பன்மொழிக் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்றார்.[4]
- இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா போன்ற நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் அழைப்பின் பேரில் அந்நாடுகளுக்குச் சென்று உரையாற்றி வந்துள்ளார்.
- மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி ஆதரவு பெற்று மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்குச் சென்று தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
சமூகச் செயல்பாடுகள்
[தொகு]- புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தில் கலைக்குழு பயிற்சியாளர், மாவட்டத் தகவல் தொகுப்பாளர்.
- சென்னை லயோலா கல்லூரி பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஊடகக் கல்விப் பயிற்றுநர்.
- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மக்கள் பள்ளி இயக்க மாநிலக் கருத்தாளர்
- ஆர்.எம்.ஏ. கலைக்கோட்டத்தின் உலக வங்கித் திட்டமான புதுவாழ்வுத் திட்டத்தின் மாநிலக் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்.
- சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் யுனிசெப் நடத்திய பள்ளிக்குப் பின்னர் திட்டத்தின் மாநிலப் பயிற்சியாளர்.
முக்கிய நூல்கள்
[தொகு]2010-ஆம் ஆண்டு முருகேஷ் எழுதி வெளியிட்ட ‘குழந்தைகள் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். லிம்கா சாதனைப் புத்தகத்திற்காக ‘குக்கூவென…’ என்ற 4.8 செ.மீ உயரமும் 4.5 செ.மீ அகலமும் கொண்ட சிறிய ஐக்கூ நூலை முருகேஷ் வெளியிட்டுள்ளார்.[5]
எழுதிய மற்றும் தொகுத்த நூல்கள்
[தொகு]புதுக்கவிதை நூல்கள்
[தொகு]- பூவின் நிழல்[6]
- கொஞ்சும் ஹைக்கூ, கொஞ்சம் புதுக்கவிதை
- 36 கவிதைகளும், 18 ஓவியங்களும்
- நீ முதல், நான் வரை
- குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன
- கடவுளோடு விளையாடும் குழந்தைகள்
- மனசைக் கீறி முளைத்தாய்
- கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்
ஐக்கூ நூல்கள்
[தொகு]- விரல் நுனியில் வானம்[7]
- என் இனிய ஹைக்கூ[8]
- தோழமையுடன்
- ஹைக்கூ டைரி
- தரை தொடாத காற்று
- நிலா முத்தம்
- என் இனிய ஹைக்கூ
- உயிர்க் கவிதைகள்
- வரும்போலிருக்கிறது மழை
- தலைகீழாகப் பார்க்கிறது வானம்[9]
- குக்கூவென…
சிறுகதை நூல்கள்
[தொகு]- இருளில் மறையும் நிழல்
குழந்தைகளுக்கான நூல்கள்
[தொகு]- பெரிய வயிறு குருவி
- உயிர்க் குரல்
- ஹைக்கூ குழந்தைகள்
- மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்
- கொஞ்சம் வேலை நிறைய சம்பளம்
- காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி
- குழந்தைகள் – சிறுகதைகள்
- எடுத்தேன் படித்தேன் தேன் கதைகள்
- படித்துப் பழகு
- பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
- ஒல்லி மல்லி குண்டு கில்லி
- அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை[10]
- தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்
- தினுசு தினுசா விளையாடலாமா..?[11][12]
- நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை
- குழந்தைகள் உலகம் – உள்ளே வெளியே
- குழந்தைகளல்ல குழந்தைகள்
- சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம்
பிற நூல்கள்
[தொகு]- மின்னல் பூக்கும் இரவு
- ஹைக்கூ கற்க
- ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை[13]
- பெண்ணியம் பேசும் தமிழ் ஹைக்கூ
- தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்...
- இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
- ஆயிரம் பூக்கள் மலரட்டும்
- குழந்தைகளால் அழகாகும் பூமி
- வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை
- பூமியெங்கும் புத்தக வாசம்
- தெருவோர தேசம்
- மழைத்துளிப் பொழுதுகள்
- என் மனசை உன் தூரிகைத் தொட்டு
- கிண்ணம் நிறைய ஹைக்கூ
- வேரில் பூத்த ஹைக்கூ
- நீங்கள் கேட்ட ஹைக்கூ
- திசையெங்கும் ஹைக்கூ
- இனியெல்லாம் ஹைக்கூ
- ஹைக்கூ நந்தவனம்
- மலையிலிருந்து கதை அருவி
விருதுகளும் பரிசுகளும்
[தொகு]- அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷிற்கு, 2021ம் ஆண்டிற்கான பால சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.[14][15]
- பாரத மாநில வங்கியின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசுகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செல்வன் கார்க்கி கவிதை விருது
- தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த குழந்தை இலக்கிய நூல் பரிசு
- திருப்பூர் தமிழ்ச் சங்கமும் பரிசு வழங்கியது.
- கவிஓவியா’ இதழின் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான பரிசு.
- கலை, இலக்கியச் சிந்தனையாளர் மன்றம் சார்பில் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு
- கம்பம் பாரதி இலக்கியப் பேரவை பரிசு.[16]
- தமுஎகச வழங்கும் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசு.
- கவிமுகில் அறக்கட்டளை பரிசு
- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கப் பரிசு.
- தவத்திரு குன்றக்குடி அடிகளார்’ நினைவு விருது
- குவைத் வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் ‘குறுங்கவிச் செல்வன்’ விருது[17]
- இவற்றைத் தவிர ஹைக்கூ வித்தகர் விருது, தமிழ்முகில் விருது, இலக்கியப் பசுமை விருது, ஹைக்கூ சுடர் விருது, மலேசிய பழனிவேல் நினைவு அறக்கட்டளையின் வள்ளுவர் விருது, சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் இலக்கிய விருது, இலக்கிய மறவர் விருது, சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது, செம்பணிச் சிகரம் என்ற விருது, இலக்கியச் சான்றோர் விருது, ஹைக்கூ செம்மல் விருது, அன்னம் விருது, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் பொதுநூலக இயக்கமும் இணைந்து வழங்கிய ‘நூலக ஆர்வலர் விருது, கவிப்பேராசான் மீரா விருது உள்ளிட்ட பல விருதுகளும் பரிசுகளும் வெவ்வேறு காலங்களில் பல்வேறு அறக்கட்டளைகளும் பிற அமைப்புகளும் முருகேஷிற்கு வழங்கி சிறப்பு சேர்த்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""சிறுவயதிலேயே புத்தக வாசிப்பு எனும் விதையை குழந்தைகள் மனதில் ஊன்ற வேண்டும்" - கவிஞர் மு.முருகேஷ்". nakkheeran (in ஆங்கிலம்). 2021-02-13. Retrieved 2021-04-22.
- ↑ "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - மு. முருகேஷ்". www.tamilonline.com. Retrieved 2021-04-22.
- ↑ "சாகித்ய அகாடமி, பால புரஸ்கார் விருது: தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், தினகரன் வாழ்த்து". Hindu Tamil Thisai. Retrieved 2021-12-31.
- ↑ "World Haiku Review - WHR Award, March 2008". sites.google.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-02-06.
- ↑ "உள்ளங்கையில் ஒரு ஹைக்கூ நூல்: 'லிம்கா' சாதனைக்குப் பரிந்துரை". Hindu Tamil Thisai. Retrieved 2021-02-06.
- ↑ "அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது; பால புரஸ்கார் விருதுக்கு மு.முருகேஷ் தேர்வு". Hindu Tamil Thisai. Retrieved 2023-03-05.
- ↑ "'குக்கூவென': 4.3 செ.மீ அளவிலான மிகச் சிறிய ஹைக்கூ கவிதை நூலை எழுதியுள்ள கவிஞர் முருகேஷ்". www.youtube.com. Retrieved 2021-02-06.
{{cite web}}
: Text "Haiku - YouTube" ignored (help) - ↑ "en iniya haikoo puthaga vimarsanam". நீரோடை (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-28. Retrieved 2021-04-22.
{{cite web}}
: Text "என் இனிய ஹைக்கூ - Neerodai" ignored (help) - ↑ "தலைகீழாகப் பார்க்கிறது வானம்". www.panuval.com (in ஆங்கிலம்). Retrieved 2021-04-22.
- ↑ "அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது; பால புரஸ்கார் விருதுக்கு மு.முருகேஷ் தேர்வு". Hindu Tamil Thisai. Retrieved 2021-12-31.
- ↑ "M. Murugesh Books". CommonFolks. Retrieved 2021-04-22.
{{cite web}}
: Text "மு. முருகேஷ் நூல்கள்" ignored (help) - ↑ "மு.முருகேஷ்". Hindu Tamil Thisai. Retrieved 2021-04-22.
- ↑ "ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை". INDIAN CULTURE (in ஆங்கிலம்). Retrieved 2021-04-22.
- ↑ எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
- ↑ Tamil writer Ambai wins Sahitya Akademi award
- ↑ "கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் கதை நூலுக்கு சிறப்புப் பரிசு". groups.google.com. Retrieved 2021-04-22.
- ↑ Karthikeyan (2016-09-23). "தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத்தில் 'குறுங்கவிச் செல்வன்' இலக்கிய விருது". tamil.oneindia.com. Retrieved 2021-02-06.