மு. பக்ருதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. பக்ருதீன் (பி: 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'முபன்' எனும் புனைப்பெயரில் அறியப்பட்ட இவர் முன்னாள் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், வானொலி/மேடை நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இதழியல்[தொகு]

  • "திரை நிலா" மாத இதழின் ஆசிரியராவார்

உலகத்து முன்னோடிகள்[தொகு]

"உலகத்து முன்னோடிகள்" எனும் தலைப்பில் வரலாற்றுத் தலைவர்களை நாடக உருவில் வானொலியில் அறிமுகப்படுத்திள்ளார்.

திரைப்படத்துறை[தொகு]

பிற்காலத்தில் திரைப்படத்தில் ஈடுபாடு கொண்ட இவர் மலேசிய நடிகர்களைக் கொண்டு தமிழ் நாட்டில் "ரத்தப் பேய்" எனும் முழுநீளத் திரைப்படத்தைத் தயாரித்தார். மலேசியத் தமிழர்கள் தயாரித்த முதல் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பக்ருதீன்&oldid=3224992" இலிருந்து மீள்விக்கப்பட்டது