உள்ளடக்கத்துக்குச் செல்

மு. நாகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. நாகநாதன்
M. Naganathan
பேராசிரியர் மு. நாகநாதன்
துணைத் தலைவர், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு
(2006-2011)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 24, 1946 (1946-12-24) (அகவை 79)
திருவாரூர், தமிழ்நாடு
துணைவர்(கள்)முனைவர் ஜமதக்னி சாந்தி
பொருளாதார பேராசிரியர் (ஒய்வு), எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.
பிள்ளைகள்3 (மரு. முத்தழகன், மரு. எழிலன், பொறி. ஜெகன்)
கல்விமுனைவர், டி. லிட், முதுகலைச் சட்டம்
முன்னாள் மாணவர்சென்னைப் பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி
தொழில்பேராசிரியர்
அரசியல் ஈடுபாடுதிராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம்

மு. நாகநாதன் (M. Naganathan, பிறப்பு: 24 திசம்பர் 1946) ஓர் இந்தியப் பொருளாதார அறிஞரும், கல்வியாளரும், திராவிட இயக்கச் சிந்தனையாளரும் ஆவார். இவர் 2006 முதல் 2011 வரை தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றி தமிழகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டார்.[1]

இளமைக்காலம் மற்றும் கல்வி

[தொகு]

அ. முத்தையன் - கண்ணம்மாள் இணையருக்கு நாகநாதன் ஆறாவது மகனாகத் திருவாரூரில் 1946ஆம் ஆண்டு திசம்பர் 24ஆம் நாள் பிறந்தார்.[2] இவருடன் பிறந்தோர் சரோஜினி, அனுசியா, சந்திரா ஆகிய மூன்று மூத்த சகோதரிகள்; நரேந்திரன், சுதாமன் என்ற இரு அண்ணன்கள்.[3]

தனது தொடக்கப் பள்ளிக் கல்வியை 1951-54 ஆண்டுகளில் திருவாரூரில் பயின்றார்.[4] நடுநிலைக் கல்வியை மயிலாடுதுறையில் 1954-56-இல் பயின்றார்.[5] 1956-62 வரை சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[6]

1964-ஆம் கல்வி ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் சேர்ந்து, பின்னர் 1967ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டத்தையும், 1970ஆம் ஆண்டில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றார்.[7] 1971இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக சேர்ந்து, 1977இல் முனைவர் பட்டம் பெற்றார்.[8] பொருளாதாரத் துறையில் ‘கூட்டாட்சி இயங்கியல்’ என்ற தலைப்பில் முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை அளித்து 2007இல் பட்டம் பெற்றார்.[9] பணியில் இருந்துகொண்டே 2004இல் இளங்கலைச் சட்டப் படிப்பையும், 2006இல் அரசமைப்புச் சட்டத்துறையில் முதுகலை படிப்பையும் முடித்தார்.[10]

கல்விப்பணி

[தொகு]
சென்னைப் பல்கலைக்கழகத்தில் டி.லிட் (D.Litt) பட்டம் பெறும் பேராசிரியர் மு. நாகநாதன்

1970 ஆம் ஆண்டில் சேலம் அரசுக் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார்.[11] பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் 1975ஆம் ஆண்டு விரிவுரையாளராகச் சேர்ந்து, இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராக பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார்.[12]

இத்துறையில் பணியாற்றிய 31 ஆண்டுகளில் 20 ஆண்டுகளாக துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். 2006 ஏப்ரல் திங்களில் விருப்ப ஓய்வு பெற்றார்.[13] பொருளாதாரத்தில் 27 முனைவர் பட்டங்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.[14] மேலும் 102 மாணவர்களின் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டங்களுக்கு நெறியாளராகவும் இருந்துள்ளார்.[15]

1995 இல் "இந்தோ-சாஸ்திரி கனடா விருதினை" பெற்று மாண்ட்ரியால் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.[16] கனடாவின் மாண்ட்-ட்ரெம்ப்ளான்ட் (Mont-Tremblant) நகரில் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டாட்சியியல் கருத்தரங்கில் பங்கேற்றார்.[17] செஞ்சீனம், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.[18]

பொதுவாழ்வு மற்றும் திட்டக்குழு பணிகள்

[தொகு]
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் பேராசிரியர் மு. நாகநாதன்

மாணவர் பருவம் முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைஞரோடு நடைப்பயிற்சியின் போது 'அறிவுப்பயிற்சி' விவாதங்களில் ஈடுபட்டார்.[19]

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக - வின் சார்பில் போட்டியிட்டார்.[20]

2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றியபோது, 11-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை முதன்முறையாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.[21] 2025 இல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்த மாநில சுயாட்சிக்கான உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.2007 இல் பூஞ்சி ஆணையத்திற்கு (Punchhi Commission) அறிக்கை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயல்பட்டார். [22] மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் (Ministry of Environment and Forests) வல்லுநர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[23]

எழுதிய நூல்கள்

[தொகு]
'மூலதனம்' (Das Kapital) தமிழாக்கப் பதிப்பை மு. கருணாநிதி வெளியிட மு. நாகநாதன் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு

தமிழ் நூல்கள்:

  • மக்கள் சீனத்தில் மலர்ந்த எண்ணங்கள் (1981)[24]
  • மூலதனம் மற்றும் மிகை மதிப்பு (பதிப்பாசிரியர், 1998)[25]
  • இந்தியப் பொருளாதாரம் - இருளில் ஒளி (2006)[26]
  • பாரதியின் சமூகப் பொருளாதாரச் சிந்தனைகள் (2007)[27]
  • நீதிதானா? நியாயமா?
  • நெருப்புப் பொறிகள்
  • பதிவுகள்
  • வளர்ச்சியா? வீழ்ச்சியா?
  • இந்தியக் கூட்டாட்சி இயல் - அதிகாரக் குவிப்பா? பகிர்வா?
  • வானியலும் சோதிடமும் - ஒரு சமூக ஆய்வு[28]

ஆங்கில நூல்கள்:

  • Dialectics of Federalism in India (2007)[29]
  • Tamil Nadu Economy: Trends and Prospects (2002)[30]
  • Dravidian Political Economy (2022)[31]
  • Economic Systems - A Comparative Study[32]
  • New Dimensions of Fiscal Federalism[33]

தனி வாழ்க்கை

[தொகு]
1975-ல் நடைபெற்ற மு. நாகநாதன் - ஜமதக்னி சாந்தி சுயமரியாதைத் திருமணம்

1975 ஏப்ரல் 30 அன்று ஜமதக்னி சாந்தியை முதல்வர் கலைஞர் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.[34] விடுதலைப் போராட்ட வீரரும், பன்மொழி அறிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான க. ரா. ஜமதக்னி - விடுதலைப் போராட்ட வீராங்கனை லீலாவதி ஆகியோரின் மகளும், 'தென்னாட்டு ஜான்சி ராணி' என மகாத்மா காந்தி அவர்களால் பாராட்டப்பெற்ற விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாளின் மகள்வழிப் பேத்தியும் முனைவர் ஜமதக்னி சாந்தி ஆவார்.[35][36][37]

இவர்களுக்கு மரு. முத்தழகன் (துணைவி சாரதா), மரு. எழிலன் (துணைவி மரு. பிரியதர்ஷினி) மற்றும் பொறி. ஜெகன் (துணைவி ஆனந்தி) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். யாழினி, ஓவியா, பிரபாகரன், தென்றல், தீரன் ஆகியோர் இவரது பேரப்பிள்ளைகள் ஆவர். இவரின் மகன் மருத்துவர் எழிலன் நாகநாதன் ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[38]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.oneindia.com/2006/05/20/naganathan-made-planning-commission-vice-chairman-1148122791.html
  2. Dravida Pozhil Special Edition, June 2023, Page 12
  3. Family Records - M. Naganathan Personal Draft Document
  4. https://dravidapozhil.pmu.edu/tamil/pdf/DRAVIDAPOZHIL-APRIL-JUNE-2023.pdf
  5. Academic Profile Summary - University of Madras Faculty Records
  6. School Alumni Records - Chintadripet Higher Secondary School
  7. https://timesofindia.indiatimes.com/city/chennai/for-100yrs-research-drove-study-of-economics-here/articleshow/56226173.cms
  8. Department of Economics Research Database - University of Madras
  9. https://rmrl.in/ta/onlinecat/115605/dialectics-of-federalism-in-india
  10. https://hlcusr.tn.gov.in
  11. Government Arts College, Salem - Faculty History Records
  12. https://www.thehindu.com/news/cities/chennai/dmks-young-mla-ezhilan-carries-on-familys-dravidian-legacy/article34713644.ece
  13. https://timesofindia.indiatimes.com/city/chennai/for-100yrs-research-drove-study-of-economics-here/articleshow/56226173.cms
  14. Research Supervisors List - University of Madras, 2024
  15. https://dravidapozhil.pmu.edu/tamil/pdf/DRAVIDAPOZHIL-APRIL-JUNE-2023.pdf
  16. Indo-Shastri Canadian Institute Awardees Database
  17. "First International Conference on Federalism (1999) - Participant Records". Forum of Federations (Canada). Retrieved 2026-01-18.
  18. Travel Diaries - Professional Visits of Prof. M. Naganathan
  19. "கலைஞருடன் எனது நடைப்பயிற்சி - பேராசிரியர் மு. நாகநாதன்". அந்தாதி மழை. 2018-08-10. Retrieved 2026-01-18.
  20. "NAGANATHAN, M. (DMK ):Constituency- Triplicane (Chennai) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2026-01-18.
  21. https://tamil.oneindia.com/news/2008/07/03/tn-aims-9-per-growth-in-eleventh-five-year-plan.html
  22. "Report of the Commission on Centre-State Relations" (PDF). Parliament Digital Library (Sansad). Retrieved 2026-01-18.
  23. "Reconstitution of Expert Committee for Environmental Impact Assessment". Press Information Bureau (PIB). 2005-06-21. Retrieved 2026-01-18.
  24. Publication List 1981 - Makkal Chinathil Malarntha Ennangal
  25. https://www.unom.ac.in/webportal/uploads/publications/publication_catalogue-price-list.pdf
  26. Indian Economy: Irulil Oli - Book Reference
  27. Bharathiyin Samooga Poruladhara Sinthanaigal - Book Catalogue
  28. Library of Dravidian Literature - Book List
  29. "Dialectics of Federalism in India - RMRL Catalogue". Roja Muthiah Research Library.
  30. Tamil Nadu Economy: Trends and Prospects. Madras University Publications. 2002.
  31. "Dravidian Political Economy - RMRL Record". Roja Muthiah Research Library.
  32. Academic Publication - Economic Systems Record
  33. Fiscal Federalism - Scholarly References List
  34. Self-Respect Marriage Records, Chennai April 1975
  35. "விடுதலைப் போராட்ட வீரர் க.ரா.ஜமதக்னி". தினமணி. 2012-08-11. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/Aug/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-540670.html. 
  36. "சுதந்திரப் போராட்ட வீரர் க.ரா. ஜமதக்னி அவர்களின் வாழ்க்கை வரலாறு". TNDIPR News (Government of Tamil Nadu).
  37. "அஞ்சலை அம்மாளின் வாரிசு ஜமதக்னி சாந்தி". Top Tamil News. https://www.toptamilnews.com/politics/229666aamir-cheran-support-dmk-candidate-for-thousand/cid4950864.htm. 
  38. "DMK’s Dr Ezhilan defeats BJP’s Khushboo Sundar in Thousand Lights". The News Minute. 2021-05-03. https://www.thenewsminute.com/tamil-nadu/dmk-s-dr-ezhilan-defeats-bjp-s-khushboo-sundar-thousand-lights-148221. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._நாகநாதன்&oldid=4457892" இலிருந்து மீள்விக்கப்பட்டது