மு. நடேஷ்
மு. நடேஷ் (14, சனவரி, 1960-20, செப்டம்பர், 2024) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர், நாடக இயக்குநர், எழுத்தாளர் ஆவார்.[1]
வாழ்கைக் குறிப்பு
[தொகு]நடேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் 14, சனவரி, 1960 அன்று பிறந்தார். இவரது தந்தை தமிழ் எழுத்தாளரும், நாடக ஆளுமையான ந. முத்துசாமி ஆவார். சிறு வயதிலிருந்தே இவரது தந்தையின் கலை இலக்கிய சகாக்களினுடன் பழகிவந்து அவர்களின் தாக்கம் பெற்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் இணைந்து பயின்றார். ஓவியக் கல்லூரியில் பயின்ற காலத்திலும் அதற்குப் பிறகான பத்து ஆண்டுகள் கூத்துப்பட்டறைப் பணிகளில் இணைந்து பணியாற்றினார். அதனால் நாடக அரங்கு அமைபிலும் ஒளி அமைப்பிலும் மதமையைப் பெற்றிருந்தார். 1990 இல் பண்டிட் ரவிசங்கரின் இசை நாடகமானது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டபோது அதற்கான அரங்க அமைப்பும், ஒளியமைப்பும் இவரால் மேற்கொள்ளபட்டன. ந. முத்துசாமியின் இறப்புக்குப் பிறகு கூத்துப்பட்டறையின் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்றார்.
இவர் ஆயிரக்கணக்கான கோட்டோவியங்களை வரைந்துள்ளார். அரூப வகையிலான வண்ண ஓவியங்களையும் வரைந்துள்ளார்.[2]
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த நடேஷ் தன் 64 வயதில் சென்னையில் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ admin (2024-09-21). "மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!". Thaaii Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ "அஞ்சலி: மு. நடேஷ் - புதிய கடவுளைத் தேடிய கலைஞன்". Hindu Tamil Thisai. 2024-09-22. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ Writer, Staff (2024-09-21). "ஓவியக் கலைஞர் கூத்துப்பட்டறை நடேஷ் முத்துசாமி காலமானார்!". Andhimazhai. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.