மு. சாயபு மரைக்காயர்
Jump to navigation
Jump to search
மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகத்து 28 1951), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து காரைக்கால் தம்பி சாயபு மரைக்காயர் வீதியில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவரும், பன்னூலாசிரியரும், இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளரும், உலகளாவிய ரீதியில் 15 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவருமாவார். மேலும் இவர் பல்வேறு துறைகளில் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எழுதிய நூல்கள்[தொகு]
- வெற்றி யாருக்கு?
- பாரதிதாசன் வாழ்விலே
- அறிவியல் அறிஞர்கள்
- பாரதிதாசன் அய்வுக்கோவை
- இஸ்லாமியத் தமிழ்த் தொண்டு
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]
- பாரதி பட்டயம்
- பாவேந்தர் பட்டயம்
- பல்கலைச் செல்வர்
- இலக்கியச் சுடர்
- எழுத்து வேந்தர்
- இறையருள் உரைமாலை
- தாஜுல் கலாம்
- சேவா ரத்னா
- தமிழ்மாமணி
- தமிழ்ப் பணிச் செம்மல்
- செந்தமிழ்ப் பரிதி
- கலைமாமணி
- சமய நல்லிணக்க விருது
உசாத்துணை[தொகு]
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011