மு. க. இசுடாலின் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருவான நாள்7 மே 2021
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்மு. க. ஸ்டாலின்
நாட்டுத் தலைவர்ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (7 மே – 10 செப்டம்பர் 2021)
ஆர். என். ரவி (10 செப்டம்பர் 2021 –)
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை35
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை அரசு
159 / 234 (68%)
எதிர் கட்சி     அதிமுக
எதிர்க்கட்சித் தலைவர்எடப்பாடி க. பழனிசாமி
வரலாறு
தேர்தல்(கள்)2021
Legislature term(s)5 வருடம்
முந்தையஎடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை

மு. க. ஸ்டாலின் அமைச்சரவை (M. K. Stalin ministry)[1] என்பது 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு அமைக்கப்பட்டது ஆகும். இந்த அமைச்சரவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7 மே 2021 அன்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சராக இடம்பெற்றிருந்த 15 பேர் அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்தின் 21வது முதல்வராக, 8வது நபராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றார்.[2]

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 14, டிசம்பர் 2022 அன்று அமைச்சராகப் பதவியேற்றார். அத்துடன் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.[3]

அமைச்சரவை[தொகு]

வரிசை எண் பெயர் தொகுதி பொறுப்பு துறை கட்சி
1. மு. க. ஸ்டாலின்
கொளத்தூர் முதலமைச்சர்
  • பொதுத்துறை
  • பொது நிர்வாகம்
  • இந்திய ஆட்சிப்பணி
  • இந்திய காவல்பணி
  • இந்திய வனப் பணி
  • மற்ற அகில இந்தியபணி
  • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
  • காவல்
  • உள்துறை
  • சிறப்புமுயற்சிகள்
  • மாற்றுத் திறனாளிகள் நலன்
திமுக
2. துரைமுருகன்
காட்பாடி நீர்வளத்துறை அமைச்சர்
  • சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள்
  • சட்டமன்றம்
  • ஆளுநர் மற்றும் அமைச்சரவை
  • தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள்
  • கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
திமுக
3. கே. என். நேரு
திருச்சிராப்பள்ளி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
  • நகராட்சி நிர்வாகம்
  • நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல்
திமுக
4. இ. பெரியசாமி
ஆத்தூர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
  • ஊரக வளர்ச்சி
  • ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
திமுக
5. க. பொன்முடி
திருக்கோயிலூர் அமைச்சர் திமுக
6. எ. வ. வேலு
திருவண்ணாமலை பொதுப் பணித்துறை அமைச்சர்
  • பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
திமுக
7. எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
குறிஞ்சிப்பாடி வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர்
  • வேளாண்மை
  • வேளாண்மை பொறியியல்
  • வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
  • தோட்டக்கலை
  • சர்க்கரை
  • கரும்புத்தீர்வை
  • கரும்புப்பயிர்
  • மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு
திமுக
8. சாத்தூர் ராமச்சந்திரன்
அருப்புக்கோட்டை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
  • வருவாய்
  • மாவட்ட வருவாய் பணியமைப்பு
  • துணை ஆட்சியர்கள்
  • பேரிடர் மேலாண்மை
திமுக
9. தங்கம் தென்னர்சு
திருச்சுழி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
  • நிதித்துறை
  • திட்டம்
  • மனிதவள மேலாண்மை
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள்
  • புள்ளியியல்
  • தொல்லியல் துறை
  • மின்சாரம்
  • மரபு சாரா எரிசக்தி மேம்பாடு
திமுக
10. உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
  • சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
  • வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்
திமுக
11. சே. ரகுபதி
திருமயம் சட்டத் துறை அமைச்சர்
  • சட்டம்
  • நீதிமன்றங்கள்
  • சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்
திமுக
12. சு. முத்துசாமி
ஈரோடு மேற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
  • வீட்டுவசதி
  • ஊரக வீட்டுவசதி
  • நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு
  • இட வசதி கட்டுப்பாடு
  • நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி
  • மதுவிலக்கு
  • ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
திமுக
13. கே. ஆர். பெரியகருப்பன்
திருப்பத்தூர் கூட்டுறவுத் துறை அமைச்சர்
  • கூட்டுறவுத் துறை
திமுக
14. தா. மோ. அன்பரசன்
ஆலந்தூர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
  • குடிசைத்தொழில்கள்
  • சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள்
  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
திமுக
15. மு. பெ. சாமிநாதன்
காங்கேயம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
  • தமிழ் வளர்ச்சி
  • செய்தி மற்றும் விளம்பரம்
  • திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
  • பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
திமுக
16. பெ. கீதா ஜீவன்
தூத்துக்குடி சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
  • ஆதரவற்றோர் இல்லங்கள்
  • குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
  • இரவலர் காப்பு இல்லங்கள்
  • சமூக சீர்திருத்தம்
  • சத்துணவுத் திட்டம்
திமுக
17. அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
  • மீன்வளம்
  • மீன்வளர்ச்சிக் கழகம்
  • கால்நடை பராமரிப்பு
திமுக
18. இராஜ கண்ணப்பன்
முதுகுளத்தூர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  • பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • சீர்மரபினர் நலன்
  • தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி
  • மின்னணுவியல்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
திமுக
19. கா. இராமச்சந்திரன்
குன்னூர் சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.
திமுக
20. அர. சக்கரபாணி
ஒட்டன்சத்திரம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
  • உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்
  • நுகர்வோர்பாதுகாப்பு
  • விலைக்கட்டுப்பாடு
திமுக
21. வே. செந்தில்பாலாஜி
கரூர் அமைச்சர் திமுக
22. ஆர். காந்தி
இராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
  • கைத்தறி மற்றும் துணிநூல்
  • பூதானம் மற்றும் கிராமதானம்
  • கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்
திமுக
23. மா. சுப்பிரமணியம்
சைதாப்பேட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
  • மருத்துவம்
  • மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு
திமுக
24. பி. மூர்த்தி
மதுரை கிழக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
  • வணிக வரிகள்
  • பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்
  • எடைகள் மற்றும் அளவைகள்
  • கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
  • சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
திமுக
25. சா. சி. சிவசங்கர்
குன்னம் போக்குவரத்துதுறை அமைச்சர்
  • போக்குவரத்து
  • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
திமுக
26. பி. கே. சேகர் பாபு
துறைமுகம் இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
  • இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
திமுக
27. பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்தி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
  • தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள்
திமுக
28. கே. எஸ். மஸ்தான்
செஞ்சி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
  • சிறுபான்மையினர் நலன்
  • வெளிநாடுவாழ் தமிழர் நலன்
  • அகதிகள்
  • வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்
திமுக
29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
  • பள்ளிக்கல்வி
திமுக
30. சிவ. வீ. மெய்யநாதன்
ஆலங்குடி சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
  • சுற்றுச்சூழல்
  • மாசுக் கட்டுப்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள்
திமுக
31. சி. வி. கணேசன்
திட்டக்குடி தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
  • தொழிலாளர் நலன்
  • மக்கள் தொகை
  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு
  • நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
திமுக
32. மனோ தங்கராஜ்
பத்மனாபபுரம் பால்வளத்துறை அமைச்சர்
  • பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
திமுக
33. டி. ஆர். பி. ராஜா
தொழில்துறை அமைச்சர்
  • தொழில்கள்
திமுக
34. மா. மதிவேந்தன்
இராசிபுரம் வனத்துறை அமைச்சர்
  • வனம்
திமுக
35. என். கயல்விழி செல்வராஜ்
தாராபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
  • ஆதிதிராவிடர் நலன்
  • மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
திமுக

அமைச்சரவை மாற்றம்[தொகு]

29 மார்ச் 2022

வரிசை எண் அமைச்சர் பெயர் தற்போதைய பொறுப்பு முன்மொழியப்பட்ட பொறுப்பு
1. இராஜ கண்ணப்பன்
  • போக்குவரத்து
  • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
  • பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • சீர்மரபினர் நலன்
2. சா. சி. சிவசங்கர்
  • பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • சீர்மரபினர் நலன்
  • போக்குவரத்து
  • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்









பணிகள்[தொகு]

சூன் 2021-ல், முதல்வர் ஸ்டாலின், முந்தைய அரசாங்கம் தாக்கல் செய்த வழக்குகளை சட்ட அமைச்சகம் மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், மீத்தேன் எடுப்பு, நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை - சேலம் விரைவுச் சாலைத் திட்டம் ஆகிய 3 விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பத்திரிகைகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு திரும்பப்பெற்றது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministers, Council of. "Council of Ministers". assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2021.
  2. THEIR TENURE PERIODS, LIST OF CHIEF MINISTERS OF TAMIL NADU. "LIST OF CHIEF MINISTERS OF TAMIL NADU & THEIR TENURE PERIODS". oneindia. பார்க்கப்பட்ட நாள் 15 May 2021.
  3. "உதயநிதி அமைச்சர் - 10 அமைச்சர்கள் துறை மாற்றம்". www.dinamalar.com. தினமலர். 14 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "Tamil Nadu to withdraw cases against anti-CAA protesters, lockdown violators". 19 February 2021.
  5. "Tamil Nadu drops cases against farm law and anti-CAA protesters | Chennai News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.