மு. கார்த்திகேயப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திகேயப் புலவர்
பிறப்பு1819
காரைநகர், யாழ்ப்பாண மாவட்டம்
இறப்பு1898 (அகவை 78–79)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுதமிழ்ப் புலவர்
சமயம்இந்து

மு. கார்த்திகேயப் புலவர் (1819 - 1898) ஈழத்துத் தமிழறிஞரும், புலவரும், நாடகாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். வேதாகமங்களை நன்கு கற்றறிந்தவர். 1886 ஆம் ஆண்டில் உதயபானு என்ற இதழை ஆரம்பித்து வெளியிட்டு வந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம், காரைநகரில் முருகேசையர் என்பவருக்குப் பிறந்தவர் கார்த்திகேயப் புலவர்.[2] தனது தந்தையிடம் இருந்து தமிழையும், காரைநகரைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகரிடம் இருந்து வடமொழியையும் கற்றார்.[2] பின்னர் தமதூரைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை என்பவரிடம் கல்வி கற்றார்.[2] ஆறுமுக நாவலரின் ஆசிரியரான இருபாலை சேனாதிராச முதலியாரிடம் தமிழ் இலக்கணத்தை முறையாகப் பயின்றார்.[2] தமது ஊரிலேயே பாடசாலை ஒன்றை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்து பல மாணவர்களைப் பயிற்றுவித்தார்.[2]

நாடகங்கள்[தொகு]

கார்த்திகேயப் புலவர் கந்த புராணத்தில் வரும் சூரபதுமனின் சரித்திரத்தை நாடகமாக இயற்றி நடிப்பித்தார்.[1] மகாபாரதக் கதாபாத்திரமான சந்திரவண்னனின் சரித்திரத்தையும் நாடகமாக எழுதினார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

இளமையிலேயே கவிகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்த இவர் தமது தந்தையால் பாடப்பெற்ற தன்னையமகவந்தாதியின் கடைசி 30 செய்யுள்களையும் பாடி நிரப்பினார்.[2] இவர் இயற்றிய நூல்கள்:[1]

  • திருத்தில்லைப் பல்சந்தமாலை
  • திண்ணபுரத் திரிபந்தாதி
  • நகுலேசரியமக அந்தாதி
  • திக்கைத் திரிபந்தாதி
  • வண்ணைத் திரிபந்தாதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 க. வைத்தீசுவரக் குருக்கள், தொகுப்பாசிரியர் (1967). காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர். பக். 149. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 மு. கணபதிப்பிள்ளை (1967). "ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்". பாரி நிலையம். p. 77. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கார்த்திகேயப்_புலவர்&oldid=2875862" இலிருந்து மீள்விக்கப்பட்டது