மு. இ. அகமது மரைக்காயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. இ. அகமது மரைக்காயர் இவர் இந்தியாவில் காரைக்காலில் பிறந்தவர். புகழேந்தி, காரை - அகமது ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர், சென்னைப் புதுக்கல்லூரி தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபாடுகாட்டிவரும் அதேநேரத்தில் தொலைக்காட்சி, வானொலிகளில் உரைகளை நிகழ்த்தியும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுமுள்ளார்.

இவரால் எழுதப்பட்ட நூல்கள்[தொகு]

 • வாழ முயன்றால் வாழலாம்
 • சீர் பெருகும் கீழக்கரை
 • அறிஞராற்றுப் படை
 • சீதக்காதி திருமண வாழ்த்து உரை
 • மலைபடுகடாம் உரை

இலக்கிய மகாநாடுகளில்[தொகு]

 • 2002 இல் இலங்கை கொழும்பில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டில் இந்திய ஒருங்கிணைப்பாளராய் செயல்பட்டார்.
 • 2011 இல் மலேசியாவில் நடைபெற்ற அனைத்துல இஸ்லாமிய ஆய்வு மகாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தினார்

விருதுகளும் கௌரவிப்புகளும்[தொகு]

 • இலங்கை கப்பல் போக்குவரத்து துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2002ல் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
 • கவிச்சுடர், இலங்கை நாடாளுமன்ற அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரால் வழங்கப்பட்டது.
 • செந்தமிழ் செம்மல், திருவையாறு தமிழய்யா கல்விக் கழகத்தால் வழங்கப்பட்டது.
 • தமிழ்மாமணி, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தால் வழங்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

 • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011