மு. இராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. இராமன் (M. Raman)(பிறப்பு 25, அக்டோபர் 1932) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தென்னாற்காடு மாவட்டம் வளவனூர் மேல் பாண்டி சாலையினைச் சேர்ந்தவர். இவர் கடலூர் நியூ டவுண் சோர்ஜ் நிதி உதவி தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். சுமார் 17 ஆண்டுகள் அரிசன பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இராமன் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப்பேரவை ”யார்-எவர்” 1967 [Tamil Nadu Legislative Assembley "Who's Who" 1967]. 01.03.1968: Tamil Nadu Legislative Assembley Department, Madras 9. 1967. 278. 
  2. தமிழ்நாடு சட்டப்பேரவை ”யார்-எவர்” 1971 [Tamil Nadu Legislative Assembley "Who's Who" 1971]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembley Department, Madras 9. 1971. 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராமன்&oldid=3621625" இருந்து மீள்விக்கப்பட்டது