மு. அப்துல் வஹாப்
தோற்றம்
மு. அப்துல் வஹாப் | |
|---|---|
| உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் மே 2021 | |
| தொகுதி | பாளையங்கோட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | பேட்டை, திருநெல்வேலி |
| பணி | ரியல் எஸ்டேட் |
மு. அப்துல் வஹாப் (Abdulwahab, M.) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வணிகவியலில் இளநிலை கல்வியினை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பயின்றுள்ளார்.[2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2021 | பாளையங்கோட்டை | திமுக | 89117 | 55.32[3] |