முஸ்லிம் நோக்கு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் நோக்கு இலங்கை பேருவளையிலிருந்து 1983ம் ஆண்டில் மாதாந்தம் வெளிவந்த ஓர் இசுலாமிய சிற்றிதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

நளீமிய்யா இசுலாமிய வெளியீட்டுப் பணியகத்தின் மாத இதழ்

வெளியீட்டாளர்[தொகு]

  • அமீன்

இலங்கையில் நளீமிய்யா கலாபீடம் ஒரு உயர்ந்த மார்க்கவியல் கலாபீடமாக கருதப்படுகின்றது. இக்கலாபீடத்தின் வெளியீட்டுப் பணியகத்தின் சார்பில் இவ்விதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆய்வு ஆக்கங்கள், இசுலாமிய உலக செய்திகள், இசுலாமிய நாடுகளின் அறிமுகங்கள் என்பன இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்