உள்ளடக்கத்துக்குச் செல்

முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசுலிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு (Muslim Arts College in Thiruvithancode) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதி நிறுவப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. [1] தொடக்கத்தில் வணிகவியல், வரலாறு, கணிதப் பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்தக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான இசுலாமிய ஆய்வு மையமும் இங்கு செயல்படுகிறது.[2]

மாணவர்களின் தனித்திறன் மற்றும் மொழி வளத்தை மேம்படுத்தும் நோக்கில் கணினி பயிற்சி வகுப்புகள், மொழி வகுப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இக்கல்லூரியில் வழங்கப்பட்டு வருகின்றன.[3] இக்கல்லூரியுடன், முசுலிம் கல்வியியல் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

முசுலிம் சிறுபான்மை சமூகத்தினருக்கு சம வாய்ப்பு மற்றும் அணுகலை வழங்கும் ஒரு கல்லூரி இருக்க வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட இசுலாமிய கல்வி சங்கத்திற்கு நீண்டகால தேவையாக இருந்ததால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. அன்புடன் சேவை செய் என்ற குறிக்கோளைக் கொண்ட இந்தக் கல்லூரி, சமூக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த கற்றல் மையம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி விழா: ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2009/Sep/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-67518.html. பார்த்த நாள்: 6 February 2025.
  2. "திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மலர் வெளியீடு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2015/Jul/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-1157042.html. பார்த்த நாள்: 6 February 2025.
  3. "சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்". திண்ணை. https://puthu.thinnai.com/2012/02/26/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE-2/. பார்த்த நாள்: 6 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]