முஷ்க் புட்ஜி
| முஷ்க் புட்ஜி அரிசி | |
|---|---|
முஷ்க் புட்ஜி அரிசி மணிகளின் நெருக்கமான ஒளிப்படம் | |
| குறிப்பு | முஷ்க்புட்ஜி அரிசி என்பது சம்மு காசுமீரின் ஒரு நறுமணமிக்க அரிசி வகையாகும். |
| வகை | நறுமண அரிசி |
| இடம் | சம்மு & காசுமீர் |
| நாடு | |
| பதிவுசெய்யப்பட்டது | சூலை 31, 2023 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindia.gov.in |
முஷ்க் புட்ஜி அரிசி (Mushqbudji rice) என்பது பாசுமதி அல்லாத, குள்ளமான தானிய மணிகளுடைய நறுமண அரிசி வகையாகும். இது முக்கியமாக இந்தியாவின் ஒன்றிய பிரதேசமான சம்மு காசுமீரின் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.[1][2][3][4] இது அனந்த்நாக் மாவட்டத்தின் சாகம் பகுதியிலும், பட்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியிலும் பொதுவாகவும் பரவலாகவும் பயிரிடப்படும் ஒரு நெற்பயிராகும். மேலும், காசுமீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் குல்காம் மாவட்டங்களிலும் உழவர்களால் நீர்ப்பாசன வசதியுடன் இது பயிரிடப்படுகிறது.[5]
அதன் புவியியல் குறியீட்டின் கீழ், இது "முஷ்க் புட்ஜி அரிசி" என்று குறிப்பிடப்படுகிறது.[6]
பெயர் மரபு
[தொகு]"முஷ்க் புட்ஜி" (मुश्क बुदजी) என்ற பெயர், வலிமையான மற்றும் இனிமையான வாசனையைக் குறிக்கும் பாரசீகச் சொல்லான "மஸ்க்" மற்றும் அப்பகுதியில் அரிசியைக் குறிக்கும் "புத்ஜி" ஆகிய சொற்களிலிருந்து உருவானது.[7] முஷ்க் புத்ஜி என்றும் இது குறிப்பிடப்படுகிறது.[8]
விளக்கம்
[தொகு]- முஷ்க் புட்ஜி அரிசியின் பண்புகள் மற்றும் பயன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:[9]
சிறப்பியல்புகள்
[தொகு]பயன்கள்
[தொகு]- இந்த அரிசியை வழக்கமான சமைத்த உணவுகளாகவோ அல்லது புலாவ், பிரியாணி மற்றும் கூழ்ம நிலைகள் போன்ற சமையல் குறிப்புகளில் சேர்த்தோ பல்வேறு வடிவங்களில் சுவைக்கலாம். முஷ்க் புட்ஜி அரிசி வகை பாரம்பரியமாக திருமண விழாக்களிலும் பண்டிகைகளிலும் பரிமாறப்படுகிறது. மேலும் முகலாயர் காலத்தில், சிறிநகரின் உள்ளூர் சந்தைகளில் இது 'அரச குடும்பத்தினருக்கான உணவு' என்று கூறி விற்கப்பட்டது.[10][11]
Photo Gallery
[தொகு]காசுமீர் வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் குல்காமைச் சேர்ந்த விவசாயி ஜஹூர் அகமது ரேஷியின் இயல்பான ஒளிப்படங்கள்.[1]
- மாடியில் நெல் வேளாண்மை.
- பண்ணைப் பயிரின் நெருக்கமான காட்சி.
- மாடித்தோட்டப் பயிர்.
- செங்குத்து வேளாண்மை.
- செங்குத்து வேளாண்மை - மற்றொரு படிமம்.
- முஷ்க் புட்ஜி நெல் செங்குத்துப் பண்ணையில் பணிபுரியும் உழவர் ஜஹூர் அகமது ரேஷி.
சான்றுகள்
[தொகு]- 1 2 "Can soil-less farming revive a revered Kashmiri rice variety on the verge of extinction?". Mint. HT Digital Streams Ltd. https://www.livemint.com/industry/agriculture/vertical-farming-soil-less-farming-kashmiri-rice-variety-extinction-gi-tag-crops-agriculture-sustainable-farming-11727766461850.html.
- ↑ Hossain, Mohammad Anwar; Hassan, Lutful; Iftekharuddaula, Khandakar Md; Kumar, Arvind; Henry, Robert (6 April 2021). Molecular Breeding for Rice Abiotic Stress Tolerance and Nutritional Quality (in ஆங்கிலம்). John Wiley & Sons. ISBN 978-1-119-63316-7. Retrieved திசம்பர் 11, 2025.
- ↑ Azmat, Hirra (28 March 2024). "Study unravels the recipe that gives mushk budiji rice its unique aroma". The Hindu (in Indian English). Retrieved திசம்பர் 11, 2025.
- ↑ "Rajouri's chikri wood craft, Anantnag's Mushqbudji rice receive GI tag". The Times of India. 8 August 2023. https://timesofindia.indiatimes.com/city/jammu/rajouris-chikri-wood-craft-anantnags-mushqbudji-rice-receive-gi-tag/articleshow/102544262.cms.
- ↑ "Rajouri Chikri woodcraft, Mushqbudji rice secure GI Tags in Jammu-Kashmir". The Economic Times. 9 August 2023. https://economictimes.indiatimes.com/news/india/rajouri-chikri-woodcraft-mushqbudji-rice-secure-gi-tags-in-jammu-kashmir/articleshow/102565579.cms?from=mdr.
- ↑ [https://www.pacificpressagency.com/th/gallery/73817/73817 Kashmir's fragrant rice Mushk Budji gets Geographical Indication (GI) Tag. Mubashir Hassan]
- ↑ Bharat, E. T. V. (2 May 2023). "Kashmiri Rice Mushk Budji: कश्मीर घाटी में बढ़ी सुगंधित चावल 'मुश्क बुदजी' की पैदावार, जानिए आंकड़े" (in hi). ETV Bharat News. https://www.etvbharat.com/hindi/delhi/bharat/aromatic-rice-mushk-budji-production-increased-in-jammu-and-kashmir/na20230502142336968968402.
- ↑ India, Govt Of; House, Print (1996). Races of Rice in India (in ஆங்கிலம்). M.D. Publications Pvt. Ltd. ISBN 978-81-85880-91-4. Retrieved திசம்பர் 11, 2025.
- ↑ "Mushqbudji Rice". NABARD - National Bank For Agriculture And Rural Development. Retrieved திசம்பர் 11, 2025.
- ↑ Grillo, Oscar (12 September 2018). Rediscovery of Landraces as a Resource for the Future (in ஆங்கிலம்). BoD – Books on Demand. ISBN 978-1-78923-724-5. Retrieved திசம்பர் 11, 2025.
- ↑ Lawrence, Sir Walter Roper (1895). The Valley of Kashmír (in ஆங்கிலம்). H. Frowde. Retrieved திசம்பர் 11, 2025.