முழுமையாக விழுங்கும் முறை உணவூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீபா, எண்டமீபா இசுட்டோலைட்டிகாவில் காணப்படும் முழுமையாக விழுங்கும் முறை உணவூட்டம்

முழுமையாக விழுங்கும் முறை உணவூட்டம் (கிரேக்கம்: ஹோலோ-முழு; சைகோஸ்-விலங்குகள்) என்பது பிறசார்பு முறை உணவூட்டம் ஆகும். இம்முறையில் நீர்மவகை அல்லது திண்மவகை உணவுகள் உட்கொள்ளளப்படுகின்றன.அமீபா போன்ற முன்னுயிரிகளும் மனிதர்கள் போன்ற பெரும்பாலான தனித்து விடுபட்டு வாழும் விலங்குகளும் இந்த வகையான உணவூட்டத்தைப் பெறுகின்றன.[1] பெரும்பாலான விலங்குகள் இவ்வகை உணவூட்டத்தையே பின்பற்றுகின்றன

முழுமையாக விழுங்கும் முறை உணவூட்ட முறையில் விலங்குகள் ,உயிரினங்களை அல்லது உயிரினங்களின் பகுதிப் பொருள்களாகிய இரத்தம், அழுகிய கரிமப்பொருளை அதாவது கரிம கட்டுமானத் தொகுப்புகளை உட்கொண்டு, செரித்துக் கொள்கின்றன.. இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, குற்றுயிரிகளின் வேதிச்சேர்க்கையிலிருந்து வேறுபடுகிறது, இதில் ஆற்றலும் கரிம கட்டுமானத் தொகுதிகளும் ஒளிச்சேர்க்கை அல்லது வேதிச்சேர்க்கை மூலம் பெறப்படுகின்றன, மேலும் சாறுண்ணி வகை உணவூட்டத்தில், செரிமான நொதிகள் வெளிப்புறமாக வெளியிடப்படுவதால் உருவாகும் ஒருபடி கரிம மூலக்கூறுகள் சூழலில் இருந்து நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.

முழுமையாக விழுங்கும் முறை உணவூட்டத்தில் பல்வேறு நிலைகள் உள்ளன, அவை பெரும்பாலும் ஒரு உயிரினத்திற்குள்ளே தனித்தனி உறுப்புகளில் குடல் போன்ற உறுப்புகளில்) நடைபெறுகின்றன:

  1. உட்கொள்ளல்: இது விலங்குகளில், வாய் வழியாக மட்டுமே உணவு எடுத்துக் கொள்ளும் நிகழ்வை குறிப்பிடுகிறது. புரோட்டோசோவாவில், இந்நிகழ்வு பொதுவாக திண்கல்ச்சிதைவு வகை வழியாக நடைபெறுகிறது.
  2. செரித்தல்: உணவு துகள்கள் வேதியியல் முறையில் நொதிகள் வழி சிக்கலான கரிம மூலக்கூறுகள் சிறிய, எளிமையான மூலக்கூறுகளாகச் சிதைக்கப்பட்டு செரிக்கப்படுகின்றன்.
  3. உறிஞ்சுதல் : செரித்தலின்போது, உணவுப் பொருள்களிலுள்ள வேதிப்பொருள்களின் செயல்மிகு மற்றும் செயல்மிகா கடத்தலால், உணவிலிருந்தான ஆற்றல் உடலை அல்லது கலநீர்மத்தைச் சென்றடைகிறது.
  4. தன்மயமாதல்; உறிஞ்சப்ப்ட்ட மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்திற்கு நேரடியாகப் பயன்படுகின்றன .

மேற்கோள்கள்[தொகு]

  1. Integrated Principles of Zoology, 14th ed.. Boston: McGraw Hill. 2006.