முழுமைத் தர மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

             முழுத்தர மேலாண்மை என்பது “தரத்திற்காக செயல்களை நிறுவனத்திலிருந்து நீக்குவதேயாகும்” என்று டெயிங் கூறுகிறார். முழுமையான தரமுடைய மாணாவர்களை உருவாக்க முழுத்தரம் வாய்ந்த மேலாண்மை அவசியமாகிறாது. முழுநிறைவுத்தர மேலாண்மையை “நிறுவனத்திள்ளோர் அனைவரும் தொடர்ந்து தரமுன்னேற்ற்த்திற்காக ஈடுபடுவதும் அதற்காக அக்கறையுடன் செயல்படுதலாகும்” என ஆக்லாண்ட் (1993) கூறுகிறார். 

முழுமைத்தர மேலாண்மையில் டெமிங்கின் அணுகுமுறை[தொகு]

தரமான பொருளை/கல்வியை மற்றும் சேவையைத் தொடர்ந்து மேம்படுத்த நிலையான குறிக்கோளை உருவாக்குதல்

பொருளாதார நிலைப்பாட்டிற்கான புதிய கொள்கைகளைப் பின்பற்றுதல்

 தரத்தை அடைய மேற்பார்வை சோதனையை சார்ந்து இருத்தல் கூடாது  

விலை நிர்ணயம் செய்வதே கடைசி வேலையாக (வியாபார பரிசாக) அமைய வேண்டும்.

 உற்பத்தி மற்றும் சேவை அமைப்பைத் தொடர்ந்து எப்பொழுதும் முன்னேற்றம் வேண்டும்

 நிறுவனப் பயிற்சிகளின் அவசியம்

 தலைமை மற்றும் மேற்பார்வை போன்றவற்றின் புதிய முறைகளைக் கையாளவேண்டும்

பயத்தை நீக்குதல் வேண்டும்    

 துறைகளுக்குள்ளும், தனிமனிதர்களுக்குள்ளும் இடையேயுள்ள தடைகளைக் களைந்திட வேண்டும்

வாசகங்கள், படங்கள் மற்றும் புத்திமதி கூறுவது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்

 பணி தரம், எண்ணிக்கை பங்கு விகிதத்தையும் தவிர்த்தல் வேண்டும்

 பணி செய்வதில் பெருமை கொள்ளும் உரிமையைப் பறிக்கும் தடைகளை நீக்குதல்[1]

தரக்குழுக்கள்[தொகு]

ஒரே துறையை சார்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான (6-8) தன்னார்வாளர்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, செயல்படுவது தரக்குழு எனப்படும். இக்குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை ஒன்றுகூடி குறைந்ததது ஒரு மணி நேரமாவது பணித் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது பற்றி கலந்தாலோசிப்பர்.

           இத்தரக்குழுவைச் சார்ந்தவர்கள் புதியதாக வரும் தன்னார்வலர்களுக்கு குழு செயல்முறைகள், கல்வி இடர்பாடுகளுக்குத் தீர்வு காணல், தரக்கட்டுப்பாடு, புள்ளியியல் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கின்றனர். நன்கு பயிற்சி பெற்ற குழு செயலாளர் தரக்குழு உறுப்பிஅனர்களுக்கு பயிற்சி அளிப்பவராகவும் குழு செயல்பாடுகள் தடையின்றி செயல்படவும் உதவுகிறார்.   

தரக்குழுவின் நோக்கம்[தொகு]

·        ஒருவரின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்தல்

·        கல்வியில் தரத்திற்கு தேவையான அணுகுமுறைகள்

·        புதிய நுட்பங்களை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்துதல்

·        கல்வி இடரபாடுகளுக்கு ஏற்றதொரு தீர்வு காணல் போன்றவை இக்குழுவின் நோக்கமாகும்.

இந்தியக் கல்வி முறையானது புத்தம் புதிய மற்றும் பாரம்பரிய முறைகளின் கலவையாக உள்ளது. பன்னாட்டு அளவில் இந்தியக்கல்வியின் தரம் குறைவாகவே உள்ளது. இந்தியாவுக்கு ஏற்றவகையில் கல்வியின் நிலையை ஆராய்ந்து தரமான கல்வியை மக்களுக்கு அளிப்பதே தரக்குழுவின் முக்கிய நோக்கமாகும். தரக்குழுக்கள் கல்வி முன்னேற்றத்திற்கான ஒரு கருவி என்றே கூறலாம்.

தரக்குழுக்கள் செயல்படும் விதம்[தொகு]

1.   தர முன்னேற்றத்தின் இயந்திரங்களாக தரக்குழுக்கள் செயல்படுகின்றன.

2.  முழுமைத்தர செயல்முறையில் அதிகமான மக்களை ஈடுபடுத்துவதற்கான கூடுதல் வசதியை குழுக்கள் அளிக்கின்றன.

3.  குழுக்களானது தங்களுக்குத்தானே நிர்வகித்து கொள்கின்றன.

4.  குழுக்கள் தங்களுடைய இலக்குகளையும், தமுக்குரிய பணிசெய்யும் வழிமுறைகளையும் , சாதனைகள், தோல்விகளை மதிப்பிடுதலையும் தாங்களாகவே அமித்துக்கொள்வதன் மூலம் தன்னாட்சியும், சுய நிர்வாகமும் தொடர்ச்சியான தரவளர்ச்சிக்குத் தம்மைத்தாமே புதுப்பித்துக்கொள்ளுதலுக்கும் விதைகளாகின்றன.

5.  குழுக்களானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெறும் போது நிறுவனமும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது.

6.  இம்மாதிரியான நிறுவனங்களில் தரத்திற்கான பயணம் பாதுகாப்பானது.

ஆதாரம்[தொகு]

  1. முழுமைத்தர மேலாண்மை கட்டகம்(2010).மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-600006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுமைத்_தர_மேலாண்மை&oldid=2353067" இருந்து மீள்விக்கப்பட்டது