உள்ளடக்கத்துக்குச் செல்

முழுநீர் இயக்க ஏரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழுநீர் இயக்க ஏரிகள் (Holomictic lakes) என்பவை ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மேற்பரப்பு முதல் அடிமட்டம் வரை சீரான வெப்பநிலை மற்றும் அடர்த்தியைக் கொண்ட ஏரிகளாகும். இந்நிலை அடுக்குகள் உருவாகாத நிலையில், ஏரி நீர் கலப்பதற்கு வழிவகுக்கிறது.

வகைகள்

[தொகு]

மெரோமிக்கு ஏரிகள் எனப்படும் இயக்கமிலா ஏரிகளுக்கு மாறாக, முழுநீர் இயக்க ஏரிகள் குறைந்தபட்சம் அவ்வப்போது கலக்கின்றன.[1] பூமியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுநீர் இயக்க ஏரிகள் வகையைச் சேர்ந்தவை; இயக்கமிலா ஏரிகள் அரிதானவை. இருப்பினும் பொதுவாகக் கருதப்படுவதை விட இவை அவ்வளவு அரிதானவையாக இல்லாமல் இருக்கலாம்.[2] தொடருறை ஏரிகள் பனியால் மூடப்பட்டு, ஒருபோதும் கலப்பதில்லை.

முழுநீர் இயக்க ஏரிகளில் ஐந்து வகைகள் உள்ளன.:[3]

  • பல்வெப்ப அடுக்கு ஏரி (ஆண்டுதோறும் பலமுறை கலக்கும்)
  • குளிர் ஒற்றைக் கலப்பு ஏரி: (ஆண்டுக்கு ஒருமுறை கலக்கும்; எதிர்மறை அடுக்கமைவைக் காட்டுகிறது.
  • வெப்ப ஒற்றைக் கலப்பு ஏரி: ஆண்டுக்கு ஒருமுறை கலக்கும்; நேர்மறை அடுக்கமைவைக் காட்டுகிறது.
  • இரட்டைக் கலப்பு ஏரி: (ஆண்டுக்கு இரண்டு முறை கலக்கும்)
  • அரிய கலப்பு ஏரி: ஆண்டுக்கு ஒருமுறை கலக்கும்; ஆண்டுக்கு ஒருமுறைக்கும் குறைவாக எதிர்மறை அடுக்கமைவு கலத்தலைக் காண்பிக்கும்.
முழுநீர் இயக்க ஏரி வகை, பிரசர் ஏரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Lewis, William M. Jr. (1983). "A revised classification of lakes based on mixing". Canadian Journal of Fisheries and Aquatic Sciences 40 (10): 1779–1787. doi:10.1139/f83-207. http://cires.colorado.edu/limnology/pubs/pdfs/Pub058.pdf.
  2. ↑ Hakala, A (2004). "Meromixis as a part of lake evolution; observations and a revised classification of true meromictic lakes in Finland.". Boreal Environment Research 9 (1): 37. https://www.researchgate.net/publication/228894579.
  3. ↑ Kevern, Niles R.; King, Darrell L.; Ring, Robert (1996). "Lake Classification Systems - Part 1". The Michigan Riparian.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுநீர்_இயக்க_ஏரிகள்&oldid=4427795" இலிருந்து மீள்விக்கப்பட்டது