முழுநிலை கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழுநிலை கோட்பாடு உளவியல் துறையின் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். முழுநிலை உளவியல்(Gestalt Psychology)[1] முப்பெரும் செருமானிய உளவியல் வல்லுநர்களின் உழைப்பினாலும், ஆய்வுகளினாலும் உருவானது. அவர்கள் 1.மாக்சு வெர்திம்ர் (Max Wertheimer), 2. கர்ட்டுகோ புகா (Kurt Koffka), 3 .வோல்காங்கு கோகலர் (Wolfgang Kohler) என்பவராவர். இக்கோட்பாடு இந்த நுற்றாண்டின் தொடக்கத்தின் உருவானதாகும். முழுநிலை உளவியல், நடத்தைக் கொள்கைக் கோட்பாட்டிற்கு (அகப்பண்புகளுக்கும் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்ற கோட்பாடு:Behaviourism )எதிர்விளைவாக உருவானது.இக்கோட்பாடு உட்புறக் காட்சிக்கோட்பாட்டினையும் (தன் உள்ளத்தைத் தானே நுணுக்கிக் காணும் செயல்சார் கோட்பாடு:Interospectionism) ஏற்கவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி பதினைந்து, தமிழ் பல்கலைகழகம், தஞ்சாவூர்,2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுநிலை_கோட்பாடு&oldid=3600176" இலிருந்து மீள்விக்கப்பட்டது