முள்வால் உழவாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்வால் உழவாரன்
Brown-backedNeedletail.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Apodiformes
குடும்பம்: Apodidae
பேரினம்: Hirundapus
இனம்: H. giganteus
இருசொற் பெயரீடு
Hirundapus giganteus
(Temminck, 1825)

உழவாரன்களில் பெரியது முள்வால் உழவாரன் ஆகும்,சிறிய கால்களை கொண்டது,அதிகமான நேரத்தை வானில் பறந்து செலவிடும், தென் ஆசியா இந்தியா ,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை தாயகமாக கொன்டது.

பெயர்கள்[தொகு]

தமிழில் : முள்வால் உழவாரன்

ஆங்கிலத்தில் :Brown-backed needletail

அறிவியல் பெயர் :Hirundapus giganteus

உடலமைப்பு[தொகு]

23 செ.மீ.-முதுகு, இறக்கைகள் வால் ஆகியன தவிர உடலின் பிற பகுதிகள் பசுமை தோய்த்த கரும் பழுப்பு நிறமாக இருக்கும். முதுகு லேசான பழுப்பு நிறம். உடலின் அடிப்பகுதி பழுப்பு. வாலடியும் வாலடி இறகுகளும் வெண்மை. [2]

காணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]

மேற்குத் தொடர்ச்சிமலைசார்ந்த பகுதிகளில் மேற்குத் தமிழ்நாட்டில் 4 முதல் 5 வரையான சிறு குழுவாகவும் 50 வரையான பெருங்கூட்டமாகவும் காடுகளின் மேலே உயரப் பிற உழவாரக் குருவி இனங்களோடு சேர்ந்து பறந்தபடி வண்டுகள், தத்துப்பூச்சி, தேனீ முதலியனவற்றை இரையாகத் தேடி உண்ணும். மணிக்கு 200 முதல் 250 கி.மீ.வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தவை.

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மேற்கு மலைத் தொடர்சார்ந்த மழைமிகுந்த காடுகளில் பெரிய பொந்துகளை உடைய வெள்ளைக் குங்கிலிய மரத்தின் அடிமரப் பொந்துகளிலும் ,மலைப் பொந்துகளிலும் 3 அல்லது 4 முட்டைகள் இடும்.

முள்வால் உழவாரன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hirundapus giganteus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க. ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:82
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்வால்_உழவாரன்&oldid=2478050" இருந்து மீள்விக்கப்பட்டது