முள்ளிலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்ளிலவு
Cotton tree at Tsing Yi Island.jpg
வசந்த காலத்தின் போது மாத்திரம் பூக்கும் முள்ளிலவுப் பூக்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: Bombax
இனம்: B. ceiba
இருசொற் பெயரீடு
Bombax ceiba
லி.
வேறு பெயர்கள்

Bombax malabaricum A. P. de Candolle
Salmalia malabarica

முள்ளிலவ மரம் (Bombax ceiba), (Bombax malabaricum) என்ற தாவரவியற் பெயராலும் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இதற்கு முள்ளிலவு என்பது தற்காலத்தியப் பெயராகும். இதற்கு சங்க இலக்கியத்தில் செந்நிற பூக்களையுடைய இலவமரம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை “ஈங்கை இலவம் தூங்கு இணர்க்கொன்றை” என குறிஞ்சிப் பாட்டிலும், “களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்” என அகநானூற்றிலும் வரும் அடிகளால் அறியலாம்.

குறிப்பு[தொகு]

  • இதனைப் பஞ்சுமரம் எனவும் அழைப்பதுண்டு. இம்மரம் நீண்டு கிளைகளைக் கொண்டு வளர்வன.
  • இதனுள் முட்கள் காணப்படும். அவை தடித்தும் மொட்டுக்கள் போலவும் காட்சியளிக்கும்.
  • இம்மரத்தில் செந்நிறப் பூக்கள் பூக்கும்.

பயன்கள்[தொகு]

இதன் இலை, பூ, விதை, பட்டை, கோந்து, பஞ்சு, வேர் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இம்மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, வெள்ளைப்பாடு இவை விலகும். விந்துவும், அணுக்களும் பலப்படும். [1]

மேற்கோள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளிலவு&oldid=3225454" இருந்து மீள்விக்கப்பட்டது