முள்ளியவளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முள்ளியவளை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°13′14″N 80°46′47″E / 9.22056°N 80.77972°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிசெ பிரிவு | கரைதுறைப்பற்று |
முள்ளியவளை (Mulliyawalai) என்பது இலங்கையின் வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊராகும். வன்னியரசர்கள், யாழ்ப்பாண அரசர்கள் காலம் தொட்டு இருந்துவந்த ஒரு நீண்ட வரலாறுடைய இடமான இவ்வூர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.
முள்ளியவளை பற்றி யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் "முள்ளியவளை அக்காலத்தில் 'வலடிடி', 'வற்கம','மேற்பற்று' என பிரிக்கப்பட்டிருந்ததுடன், வன்னி பிரிவுகளில் அதி விஷேசமானதும் செழிப்பான இராச்சியமுமாகும்" என குறிப்பிடப்படுகிறது.