முல்லைத்தீவு வான் தாக்குதல், ஏப்ரல் 2008
Appearance
முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு, புன்னை நீராவியடியில் அமைந்த குடியிருப்புக்கள் மீது இலங்கை இராணுவத்தினரின் வான் படையினர் நடத்திய தாக்குதல் முல்லைத்தீவு வான் தாக்குதல் ஆகும். வியாழக்கிழமை, ஏப்ரல் 17 அன்று காலை 6:30 மணியளவில் நான்கு வானூர்திகள் நடத்திய இத்தாக்குதலில் 15 வயதுடைய பிரமந்தனாறு மகாவித்தியாலத்தினைச் சேர்ந்த மாணவியான அன்சிலாஸ்தியன் டிலக்சனா என்பவர் கொல்லப்பட்டும் ஜெராட் என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் பல சேதமடைந்தும் பயன்தரும் மரங்கள் பலவும் சேதமடைந்துள்ளன.