முல்லைக்கல் பகவதி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முல்லைக்கல் பகவதி கோவில் எனவும் அழைக்கப்படும் முல்லைக்கல் கோவில் (Mullakkal Temple) என்பது ஆலப்புழையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இக் கோயில் முற்றத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அனுமதியுண்டு. இந்தக் கோவில் அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு அர்ப்பணம் செய்ததாகும். இந்தக் கோவிலில் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியமானது. இந்தக் கோவிலை கேரள தேவஸ்வ வாரியம் பராமரித்து வருகிறது.

முல்லைக்கல் பகவதி கோவில், ஆலப்புழை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கே காணப்படும் முல்லைச் செடிகளைப் பராமரிப்பதற்காக அன்னை பகவதி அடிக்கடி இங்கே வந்து காட்சியளித்ததாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு சிறப்பு என்ற பெயரில் 41 நாள் நீண்ட உற்சவம் கொண்டாடப்படுகிறது. அவற்றில் கடைசியாக வரும் 12 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தத் திருவிழா நவம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கி, டிசம்பர் மாத இறுதி வாரத்தில் முடிவுறும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]