முல்லா நசுருதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோப்காபி அரண்மனையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 17ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த நசுருதீனின் கேளிக்கைச் சித்திரம்

முல்லா நசுருத்தீன் (துருக்கியம்: Nasreddin Hoca, பாரசீக மொழி: خواجه نصرالدین‎, பஷ்தூ: ملا نصرالدین, அரபு மொழி: نصرالدین جحا‎ / ALA-LC: Naṣraddīn Juḥā, உருது: ملا نصرالدین , உசுபேகியம்: Nosiriddin Xo'ja, Nasreddīn Hodja, போசாங்கி: Nasrudin Hodža) என்பவர் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும்.

இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானியும் மெய்யியளாலரும் ஆவார். இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர்.[1] இவர் ஆயிரக்கணக்கான கதைகளில் வருகின்றார். பல கதைகளில் இவரின் நகைச்சுவை மிக்க விகடம் புலப்பட்டாலும் பெரும்பான்மையான கதைகளில் இவரே நகைப்புக்குள்ளாகிறார்.[2]

இவரின் கதைகள் துருக்கி மட்டும் அல்லாது இந்தியா, சீனா, உருசியா போன்ற நாடுகளிலும் புகழ் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் நசுரதீன் குவாஜா என்னும் விழா இவரின் பெயரால் சிறப்பிக்கப்படுகின்றது.[3]

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1996 முதல் 1997 வரை உள்ள ஆண்டினை பன்னாட்டு நசுருதீன் ஆண்டு (International Nasreddin Year) என அறிவித்தது.[4]

இவரின் கூற்றுகள் சிலவேலையில் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், இவர் உண்மையில், முட்டாள்தனமாக அல்ல, இறை ஏவுதலால் ஞானத்தையே எடுத்துரைத்தார் என்பர்.

தி பிலசன்டிரீஸ் ஒஃப் காகியா நாசர் இதின் இஃபென்தி[5]

அங்காராவில் உள்ள முல்லா நசுருதீனின் சிலை
அங்காராவில் உள்ள முல்லா நசுருதீனின் சிலை

ஆதாரங்கள்[தொகு]

  1. The outrageous Wisdom of Nasruddin, Mullah Nasruddin; accessed 19 பிப்ரவரி 2007.
  2. Javadi, Hasan. "MOLLA NASREDDIN i. THE PERSON". Encyclopaedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 5 ஜூலை 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-19.
  4. "...UNESCO declared 1996–1997 the International Nasreddin Year..." பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்.
  5. The Turkish Jester or The Pleasantries of Cogia Nasr Eddin Effendi. Translated from the Turkish by George Borrow. 1884. http://www.gutenberg.org/ebooks/16244. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லா_நசுருதீன்&oldid=3568191" இலிருந்து மீள்விக்கப்பட்டது