முல்லநேழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முல்லாநெழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முல்லநேழி நீலகண்டன்
தாய்மொழியில் பெயர்മുല്ലനേഴി നീലകണ്ഠൻ നമ്പൂതിരി[1]
பிறப்பு(1948-05-16)16 மே 1948
ஒல்லூர், திருச்சூர், கேரளம், இந்தியா
இறப்பு22 அக்டோபர் 2011(2011-10-22) (அகவை 63)
திருச்சூர்
கல்லறைமுல்லநேழி மனை, அவிணிச்சேரி ஒல்லூர்
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்முல்லநேழி
பணிபாடாலாசிரியர், கவிஞர், நாடகாசிரியர், நடிகர், ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1976–2011

முல்லநேழி நீலகண்டன் நம்பூதிரி (ஆங்கிலம்: Mullanezhi Neelakandan Namboothiri ) (1948 – 2011) முல்லநேழி என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் இந்தியவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரைச் சேர்ந்த மலையாளக் கவிஞரும், நாடக ஆசிரியரும், பாடலாசிரியரும், நடிகருமாவார். 1995 இல் சமதலம் நாடகத்துக்காகவும், 2010 இல் கவிதா என்ற கவிதைத் தொகுப்பிற்காகவும் இவருக்கு இரண்டு முறை கேரள சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் நாவல்பழம் படத்திற்காக சிறந்த பாடலுக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார். 22 திரைப்படங்களுக்கு 69க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், உப்பு, பிறவி, கழகம், நீலதாமரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.[2][3]

சுயசரிதை[தொகு]

இவர் 16 மே 1948 இல் திருச்சூரிலுள்ள ஒல்லூரின் அவிணிச்சேரி என்ற ஊரில் முல்லநேழி மனையில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கினாலும், இவரிடம் கவிஞரைக் கண்டுபிடித்து இவரது வாழ்க்கையில் வழிகாட்டியவர் வைலோபிள்ளி சிறீதர மேனன் என்பவர்தான். வித்வான் பாடத்திட்டத்தில் சேரத் தூண்டுவதற்கும், இதனால் பள்ளி ஆசிரியராவதற்கும் வைலோபள்ளி முக்கிய பங்கு வகித்தார். இவர் இராமவர்மபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் தனது வாழ்நாள் முழுவதும் கவிதைகளை எழுதினார். அதில் இவர் ஆர்வமும் கவர்ச்சியும் ஊட்டும் மரபுகளை உருவாக்க முடிந்தது: இவர் 'பழைய பள்ளியை' சேர்ந்தவர். சமஸ்கிருதத்திலும், இசையிலும் இலக்கியத்திலும் நாட்டுப்புற மரபுகளிலும் உறுதியான அடித்தளத்தை கொண்டிருந்தார். இவரது எழுத்துக்களில், இவற்றின் சாரம் தெரிந்தது. நவீன நீரோட்டங்களில் மிகச் சிறந்ததைத் தழுவுவதற்காக இவர் தனது கடந்த காலத்தையும் பாரம்பரியத்தையும் கேலி செய்யவில்லை. இவரின் முக்கியமான கவிதைகள் மோகபக்சி, இராப்பாட்டு, நாறாணத்து பிராந்தன், பெண்கொடா போன்றவையாகும் . இவர் ஒரு நாடக ஆர்வலராகவும் இருந்தார். இவர் அக்ரகாமி திரையரங்குகளை வழிநடத்தி பல நாடகங்களை எழுதினார். இவை சமதலம் என்றத் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சில நாடகங்களும் எழுதினார். நாடக அரங்குகளில் வி.டி.பட்டதிரிப்பாடு, எம்.ஆர் பட்டத்திரிப்பாடு, பிரேம்ஜி போன்றவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாத இயக்கத்தால் இவர் ஈர்க்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டில் சமதலம் என்ற நாடகத்துக்காகவும், 2010 இல் இவரது கவிதைகளின் தொகுப்பிற்காகவும் கேரள சாகித்ய அகாதமி விருதை வென்றார். 1980 முதல் 1983 வரை கேரள சங்க நாடக அகாதமியின் இயக்குநர் குழு உறுப்பினராக பணியாற்றினார்.

1976 ஆம் ஆண்டில் அஜீஸ் எழுதிய நாவல்பழங்கள் என்றத் திரைப்படத்தில் இடம்பெற்ற "கருகருத்தொரு பெண்ணாணு" பாடலை எழுதி திரைப்பட பாடலாசிரியரானார். கே. பி. குமாரனின் லட்சுமி விஜயம் என்றத் திரைப்படத்தில் சியாமின் இசை இயக்கத்தில் நான்கு பாடல்களை எழுதினார். இவர். தேவராஜன், எம். பி. ஸ்ரீனிவாசன், இரவீந்திரன், கே. ராகவன், ஏ. டி. உம்மர், ஜான்சன், ஜெர்ரி அமல்தேவ் மற்றும் வித்யாதரன் போன்ற பல்வேறு இசை இயக்குனர்களுடன் பணியாற்றிய பெருமையைப் பெற்றவர். இவரது கடைசி படம் இந்தியன் ரூபாய் என்பதாகும். 22 திரைப்படங்களில் ஏறத்தாழ 70 பாடல்களை எழுதியுள்ளார்.

சாவேர்ப்படா (1970) என்ற நாடகத்தின் மூலம் இவர் நடிப்பு உலகில் நுழைந்தார். அதில் இவர் பிரேம்ஜியுடன் இணைந்து நடித்தார். இவர் பிறவி, உப்பு மற்றும் கழகம் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மாரடைப்பு காரணமாக 2011 அக்டோபர் 22 அன்று இறந்தார். இவருக்கு சாவித்ரி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகள் இருந்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Poet, lyricist Mullanezhi dies" இம் மூலத்தில் இருந்து 24 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111124045650/http://www.mathrubhumi.com/english/story.php?id=115691. 
  2. "Renowned Malayalam poet and lyricist Mullanezhi passes away". NDTV.com. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2011.
  3. "Lyricist Mullanezhi is dead". Deccan Chronicle. Archived from the original on 30 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லநேழி&oldid=3791421" இலிருந்து மீள்விக்கப்பட்டது