முலைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முலைடீ
Yellowfin goatfish.jpg
முலோய்டிக்திசு வனிகோலென்சிசு (Mulloidichthys vanicolensis)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: முலைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பருப்பேனியசு இன்சுலாரிசு
முலோய்டிக்திசு பிளேவோலீனியேட்டசு

முலைடீ (Mullidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை வெப்பவலய கடல் வாழ் மீன்கள். இவற்றை உவர்நீர்ப் பகுதிகளில் அதிகம் காணமுடியாது. பொதுவாக, அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள பவளப்பாறைத் திட்டுக்களில் காணப்படுகின்றன. இக் குடும்பத்தில் 6 பேரினங்களில் 55 இனங்கள் உள்ளன.

இக் குடும்பத்து மீனினங்கள் பல துலக்கமான நிறங்களைக் கொண்டவை. எனினும் இவை காட்சியகங்களில் வைப்பதற்கு விரும்பப்படுவது இல்லை. பொதுவாக பல நாடுகளில், இவை உணவுக்குரிய மீன்களாக உள்ளன. இக் குடும்பத்து மீனினங்களில் பெரியதான பருப்பேனியசு பார்பேரினசு (Parupeneus barberinus) 55 சதம மீட்டர் வரையான நீளம் கொண்டது. பெரும்பாலான இனங்கள் இதன் அரைப்பங்களவு நீளத்திலும் குறைவானவையே. நீண்ட உடலமைப்புக் கொண்ட இவற்றுக்குப் பிளவுபட்ட வால் துடுப்புக்கள் அமைந்துள்ளன. இவற்றின் முதுகுத் துடுப்புக்கள் வெவ்வேறாக உள்ளன.

மீன் வளர்ப்பவர்கள் இவற்றை விரும்பாமைக்கான முக்கிய காரணம் இவற்றின் உணவுப்பழக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவை, அவற்றின் கன்னப் பகுதியிலிருந்து நீண்டிருக்கும் வேதியுணரித் தொடுமுளைகள் (chemosensory barbels) மூலம் நீரடிப் படிவுகளில் உள்ள இரைகளைத் தேடித் தொடர்ந்து உண்கின்றன. புழுக்கள், புறவோட்டு உயிரிகள், மெல்லுடலிகள், பிற சிறிய முதுகெலும்பிலிகள் என உண்ணக்கூடிய எல்லாவற்றையுமே இவை உண்கின்றன.

பகல் பொழுதில் இக் குடும்பத்து மீன்கள் பல செயல்பாடற்ற கூட்டங்களை உருவாக்குகின்றன. இக் கூட்டங்களில் வெவ்வேறு இன மீன்கள் சேர்ந்திருப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, செங்கடல், ஹவாய் ஆகிய பகுதிகளில் வாழும் முலோய்டிக்திசு வனிக்கோலென்சிசு (Mulloidichthys vanicolensis), லுத்யானசு காசுமிரா (Lutjanus kasmira) இன மீன்களுடன் சேர்ந்து இருக்கக் காணப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், முலோய்டிக்திசு வனிக்கோலென்சிசு, லுத்யானசு காசுமிரா இனத்தின் நிறத்துக்கு ஏற்பத் தமது நிறத்தையும் மாற்றிக் கொள்கின்றன.

இரவில் இக் கூட்டம் கலைந்து தனித்தனியாக மீன்கள் இரைதேடப் புறப்பட்டுவிடும். இரவில் இரைதேடும் பிற உயிரினங்கள் சில இரைதேடும் முலைடீக்களைத் தொடர்ந்து சென்று அவை கவனியாது விடும் இரைகளை உண்பதற்காகக் காத்திருக்கின்றன. முலைடீ குடும்ப மீன்கள் 110 மீட்டருக்கு அதிகமான ஆழமுள்ள நீர்ப் பகுதிகளுக்குள் செல்வதில்லை.

வகைப்பாடு[தொகு]

பேரினங்கள்: முலோய்டிக்திசு (Mulloidichthys)
முலூசு (Mullus)
பருப்பேனியசு (Parupeneus)
சியூடுபேனியசு (Pseudupeneus)
உபெனீக்திசு (Upeneichthys)
உபேனியசு (Upeneus)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலைடீ&oldid=1672948" இருந்து மீள்விக்கப்பட்டது