முறையற்ற தலை அதிர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முறையற்ற தலை அதிர்ச்சி
ஒத்தசொற்கள்குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி, விபத்தல்லாத பாதிப்பு
விழித்திரை இரத்தக் கசிவு with overlying skull fracture from abusive head trauma
அறிகுறிகள்Variable[1]
சிக்கல்கள்Seizures, பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம், cognitive impairment[2][1]
வழமையான தொடக்கம்ஐந்து வயதுக்கும் குறைவான உயிர்வாய்ப்பு [3]
காரணங்கள்Blunt trauma, vigorous shaking[1]
நோயறிதல்வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி[1]
தடுப்புபுதிய பெற்றோருக்கு கல்வியறிவுறுத்தல் [1]
முன்கணிப்புLong term health problems common[3]
நிகழும் வீதம்3 per 10,000 babies per year (US)[1]
இறப்புகள்≈25% risk of death[3]

முறையற்ற தலை அதிர்ச்சி ( AHT ), பொதுவாக குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி ( SBS ) என அழைக்கப்படுகிறது, இது வேறு ஒரு நபரின் தவறான கையாளல்களால் குழந்தையின் தலையில் ஏற்படும் பாதிப்பு ஆகும். இந்த நோய்க்குறியின் அறிகுறிகள் நுட்பமான அறிகுறிகள் முதல் வெளிப்படையான அறிகுறிகள் வரை இருக்கலாம். [1] வாந்தி அல்லது ஒரு குழந்தை சீர்மையின்றி இருத்தல் ஆகியவை மூலம் இதன் அறிகுறிகளை அறியலாம். பெரும்பாலும் முறையற்ற தலை அதிர்ச்சியின் அறிகுறிகள் எதுவும் கானப்படுவதில்லை. வலிப்புத்தாக்கங்கள், பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவை இந்த நோய்க்குறியின் சிக்கல்களில் அடங்கும்.[2]

இது குழந்தையின் தலையில் ஏற்படும் ஓர் அப்பட்டமான அதிர்ச்சி அல்லது வீரியமான நடுக்கம். ஆகும். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதால் அந்தக் குழந்தையின் பராமரிப்பாளர் எரிச்சலடைவதன் விளைவாக இது நிகழ்கிறது. [3] அறிகுறிகள் குறிப்பிடப்படாததாக இருப்பதால் நோயறிதல் கடினமாக இருக்கும். இது நிகழ்ந்துள்ளதாகக் கவலை இருந்தால் தலையின் CT ஸ்கேன் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. விழித்திரை இரத்தப்போக்கு பொதுவானது என்றாலும், இது மற்ற நிலைகளிலும் ஏற்படலாம். முறையற்ற தலை அதிர்ச்சி என்பது ஒரு வகை குழந்தைகள் மீதான வன்கொடுமை ஆகும். .

புதிய பெற்றோருக்குஇது தொடர்பான கல்வி அறிவினை வழங்குதல் இந்த நிலைமையின் வீதங்களைக் குறைப்பதில் பயனளிக்கும் என்று தோன்றுகிறது. சில நேரங்களில் பெருமூளையில் சண்ட் எனப்படும் ஓர் கிளை இணைப்பைப் பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. முறையற்ற தலை அதிர்ச்சி நோய்க்குறி ஆண்டுக்கு 10,000 குழந்தைகளுக்கு 3 முதல் 4 வரை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்கு குறைவானவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. [3] இறப்பு ஆபத்து சுமார் 25% ஆகும். நோயறிதல் பெற்றோருக்கு சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

அறிகுறிகள்[தொகு]

விழித்திரை இரத்தக்கசிவு, நீண்ட எலும்புகளில் பல எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் இரத்தக் கட்டிகள் உருவாதல் ஆகியவை இதனுடன் தொடர்புடைய இயல்பான பாதிப்புகள் ஆகும்.[4] குழந்தைகள் மீதான வன்கொடுமையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அறிகுறிகளாக இந்த அறிகுறிகள் பல ஆண்டுகளாக உருவாகியுள்ளன. ஒரு இளம் குழந்தை விழித்திரை இரத்தப்போக்கு, எலும்பு முறிவுகள், மென்மையான திசு காயங்கள் அல்லது மூளையில் இரத்தக் கட்டிகள் உருவாதல் ஆகியவற்றைக்கொண்டிருக்கும் போது, குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கடுமையாக சந்தேகிக்கிறார்கள், அவை தற்செயலான அதிர்ச்சியாகவோ அல்லது பிற மருத்துவ நிலைமைகளால் விளக்க முடியாததாகவோ இருக்கிறது.[5]

விழித்திரை இரத்தக்கசிவு சுமார் 85% குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி நிகழ்வுகளில் ஏற்படுகிறது; விழித்திரை இரத்தப்போக்குகளின் வகை இந்த நிலையின் சிறப்பியல்பு ஆகும், இது நோயறிதலை நிறுவுவதில் அடையாளம் காணல்களைப் பயனுள்ளதாக மாற்றுகிறது. [6] குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியைத் தவிர விழித்திரை இரத்தப்போக்குகளுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், வழக்கமாக கூடுதல் அடையாளம் காணல்கள் (கண்கள் அல்லது முறையானவை) உள்ளன, அவை மாற்று நோயறிதல்களைத் தெளிவாக்குகின்றன.   [ மேற்கோள் தேவை ] முதுகெலும்புகள், நீண்ட எலும்புகள் மற்றும் விலா எலும்புகளின் எலும்பு முறிவுகளும் முறையற்ற தலை அதிர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். [7] 1972 ஆம் ஆண்டில் டாக்டர் ஜான் காபீ தனது அறிக்கையில் எலும்பின் இடைவளர் முனைகள் ( எலும்பு மற்றும் கார்டிகல் எலும்பை உள்ளடக்கிய பெரியோஸ்டியம் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள எலும்பின் சிறிய கூறுகள் கிழிந்து பிய்ந்திருத்தல்..) மற்றும் "ஒரு மூட்டுக்கு அருகிலுள்ள மற்றும் தொலைவிலும் உள்ள எலும்புகள் குறிப்பாக முழங்காலில் பாதிக்கப்படுகின்றன." என்று குறிப்பிடுகிறார்.[8]

முறையற்ற தலை அதிர்ச்சி பாதித்த பின்னர் எரிச்சல், செழிக்கத் தவறுதல், உண்ணும் முறைகளில் மாற்றங்கள், சோம்பல், வாந்தி, வலிப்புத்தாக்கங்கள், வீக்கம் அல்லது இறுக்கமான உச்சிக்குழி (குழந்தையின் தலையில் மென்மையான புள்ளிகள்), தலையின் அளவு அதிகரித்தல், சுவாசம் மாறுதல், மற்றும் விரிந்த கண் பாவை ஆகியவற்றைக் காட்டலாம். [9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Update on abusive head trauma.. 
  2. 2.0 2.1 Advanced Pediatric Assessment, Second Edition. Springer Publishing Company. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Preventing Abusive Head Trauma in Children". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 4 April 2017. Archived from the original on 11 June 2017. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  4. "NINDS Shaken Baby Syndrome information page". National Institute of Neurological Disorders and Stroke. 2014-02-14. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2008-06-23.
  5. B.G.Brogdon, Tor Shwayder, Jamie Elifritz Child Abuse and its Mimics in Skin and Bone
  6. . November 2010. 
  7. "The battered-child syndrome". JAMA 181: 17–24. July 1962. doi:10.1001/jama.1962.03050270019004. பப்மெட்:14455086. 
  8. "On the theory and practice of shaking infants. Its potential residual effects of permanent brain damage and mental retardation". American Journal of Diseases of Children 124 (2): 161–9. August 1972. doi:10.1001/archpedi.1972.02110140011001. பப்மெட்:4559532. 
  9. Types of brain injury: Shaken baby syndrome பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம். Brain Injury Association of America. Retrieved on September 24, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முறையற்ற_தலை_அதிர்ச்சி&oldid=2891951" இலிருந்து மீள்விக்கப்பட்டது