உள்ளடக்கத்துக்குச் செல்

முர்ரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முர்ரி
ضلع مری
மாவட்டம்
மேல்: முர்ரி உணவு விடுதி
கீழ்: கோட்லி சட்டியான் மலைகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முர்ரி மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முர்ரி மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்இராவல்பிண்டி
நிறுவிய ஆண்டு14 அக்டோபர் 2022
தலைமையிடம்முர்ரி
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்)
பரப்பளவு
 • மொத்தம்738 km2 (285 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • மொத்தம்3,72,947
 • அடர்த்தி510/km2 (1,300/sq mi)
 • நகர்ப்புறம்
1,79,444
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடு0593
வருவாய் வட்டங்கள்2

முர்ரி மாவட்டம் (Murree), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தின் வடகோடியில், கைபர் பக்துன்வா மாகாணத்தின் எல்லையில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் முர்ரி நகரம் ஆகும். முர்ரி நகரமானது பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்கிழக்கில் 436.8 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 65.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ராவல்பிண்டி மாவட்டத்தின் இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டு முர்ரி மாவட்டம் 14 அக்டோபர் 2022 அன்று நிறுவப்பட்டது.[1]பாகிஸ்தான் நாட்டில் அதிக எழுத்தறிவு கொண்ட வெகுசில மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 87% ஆகும்.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

முர்ரி மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் தெற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்
வருவாய் வட்டம் பரப்பளவு

(km2)[2]

மக்கள் தொகை

(2023)[2]

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)[2]

எழுத்தறிவு %


(2023)

ஒன்றியக் குழுக்கள்
கோட்லி சட்டியான் வட்டம் 304 120,421 396.12 88.20%
முர்ரி வட்டம் 434 252,526 581.86 84.79% 15
மொத்தம் 738 372,947 480 86.01%

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 66,187 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 3,72,947 ஆகும்[3].பாலின விகிதம் 100 பெண்களுக்கு 101.18 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.90% ஆகும்.[4][5]இதன் மக்கள்தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 82,063 (22.19%) ஆக உள்ளனர்.[6]நகர்புறங்களில் 48,729 (13.07%) மக்கள் வாழ்கின்றனர்.[4]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 99.61% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.39% மக்களும் பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 26.00% மக்களும், இந்த்கோ மொழியை 26% மக்களும், உருது மொழியை 5.73% மக்களும், பஷ்தூ மொழியை 2.12% மக்களும், பிற மொழிகளை 1.96% மக்கள் தாய் மொழியாகப் பேசுகின்றனர்[7].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sunny, Patrick (2024-11-19). "'Poorly' organised Murree tehsils irk residents". The Express Tribune (in ஆங்கிலம்). Retrieved 2024-11-25.
  2. 2.0 2.1 2.2 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  3. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. 4.0 4.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முர்ரி_மாவட்டம்&oldid=4321667" இலிருந்து மீள்விக்கப்பட்டது