முரு. சொ. நாச்சியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முரு. சொ. நாச்சியப்பன் (பிறப்பு: அக்டோபர் 3 1940) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழ் வண்ணன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் இதழாசிரியராகவும், தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய பத்திரிகைகளில் துணையாசிரியராகவும் இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். மேலும், "கண்ணதாசன் பரம்பரை" எனும் தலைப்பில் தமிழகக் கவிஞர்களை மலேசிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் தொடர் கட்டுரையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]