உள்ளடக்கத்துக்குச் செல்

முருகேசுவரி தனராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகேசுவரி தனராஜன்
Murukasvary S. Thanarajan
ஜொகூர் மாநில சட்டமன்றம்
தெங்காரோ சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2008–2013
முன்னையவர் கிருஷ்ணசாமி சீமான்
பின்னவர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி
பெரும்பான்மை8,233 (2008)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Murukasvary S. Thanarajan
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி பாரிசான்; மஇகா
பணிஅரசியல்வாதி

முருகேசுவரி தனராஜன் (ஆங்கிலம்; மலாய்: Murukasvary S. Thanarajan) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2008 முதல் 2013 வரை மலேசியா, ஜொகூர், தெங்காரோ சட்டமன்றத் தொகுதியின் (Tenggaroh State Constituency) (N33) சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[2]

இவர் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மஇகா (MIC) கட்சியைச் சேர்ந்தவர். இவருக்குப் பிறகு 2013 மலேசியப் பொதுத் தேர்தலில் அதே தொகுதியிலிருந்து ரவீன் குமார் கிருஷ்ணசாமி என்பவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஇகாவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான முருகேசுவரி தனராஜன், ஜொகூர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக ஒரு தவணை பணியாற்றி உள்ளார்.[3] தெங்காரோ சட்டமன்றத் தொகுதி என்பது மலேசியாவின் ஜொகூர் மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மெர்சிங் மக்களவைத் தொகுதியில் (P154) அமைந்துள்ள ஒரு தொகுதியாகும்.

பொது

[தொகு]

முருகேசுவரி தனராஜன் தற்போது வரை மஇகா கட்சியின் ஜொகூர் மஇகா மகளிர் பிரிவிலும்; மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Y.B. Puan Murukasvary a/p S. Thanarajan, PIS., AMN" (PDF). dewannegeri.johor. Retrieved 5 February 2026.
  2. "Murukasvary a/p S.Thanarajan yang mengalahkan calon PAS". Pemuda PAS Malaysia. Retrieved 5 February 2026.
  3. "PERSIDANGAN KEEMPAT DEWAN NEGERI JOHOR KE-12" (PDF). DEWAN NEGERI JOHOR. Retrieved 5 February 2026.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகேசுவரி_தனராஜன்&oldid=4484727" இலிருந்து மீள்விக்கப்பட்டது