முருகாற்றுப்படை
Appearance
முருகாற்றுப்படை என்னும் பெயரில் ஐந்து நூல்கள் உள்ளன.
- திருமுருகாற்றுப்படை – சங்ககால நக்கீரர் பாடிய நூல்
சித்தாந்தம் என்னும் இதழில் அருணகிரிநாதர் பாடியனவாக நான்கு நூல்கள் காட்டப்பட்டுள்ளன.
- அருள்முருகாற்றுப்படை
- இது 69 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. இதன் முதலிலும் முடிவிலும் இரண்டு வெண்பாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.[1]
- பொருள்முருகாற்றுப்படை
- 35 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
- அணிமுருகாற்றுப்படை
- 41 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
- வருமுருகாற்றுப்படை
- 64 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. இது கந்தர் சஷ்டி கவசத்தில் உள்ளது போன்ற நடையினைக் கொண்டுள்ளது.
என்பன அவை.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
என்னுடைய நாதன் எழுத்தாறு பாவாறு
மின்னும் தலமும்தாம் ஈறாறு – மன்னுமுகம்
ஓராறு வேதத்தின் உள்ளாறு பொன்நெடுந்தோள்
ஈறாறு கண்ஆ(று) இரண்டு – முதல் வெண்பா
பாலைப் பதிஉறைவாய் பன்னிரண்டு தோளுடையாய்
மாலைக் கடம்புபடர் மார்புடையாய் – காலையினும்
செவ்வாய் வரைகிழியச் செவ்வேல் விடுத்தருளும்
கையாய் கடைபோகக் கா – இறுதி வெண்பா