முரித்கே
முரித்கே
مریدکے | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 31°48′07″N 74°15′18″E / 31.802°N 74.255°E | |
நாடு | ![]() |
மாகாணம் | பஞ்சாப், பாகிஸ்தான் |
மாவட்டம் | சேய்க்குப்புரா மாவட்டம் |
ஏற்றம் | 205 m (673 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 1,67,082 |
• தரவரிசை | 37வது |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
முரித்கே (Muridke), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சேக்புரா மாவட்டத்தில் உள்ள முரித்கே வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். முரித்கே நகரம் மாவட்டத் தலைமையிடமான சேக்குப்புராவிற்கு வடகிழக்கே 45.8 கிலோமீட்டர் தொலைவிலும், லாகூருக்கு வடக்கே 51.3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 205 மீட்டர் (675 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. [2]இந்நகரம் வங்காளதேசம்-பெஷாவரை இணைக்கும் பெரும் தலைநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 2017 கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 1,67,082 ஆகும்.[3]
2025 சிந்தூர் நடவடிக்கை
[தொகு]2025 இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் செயல்படும் 9 தீவிரவாதப் பயிற்சி முகாம்களின் மீது வான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வான் தாக்குதலில், முருத்கே நகரத்தில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்றவற்றின் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Punjab (Pakistan): Province and Major Cities, Municipalities & Towns". Punjab (Pakistan): Province and Major Cities, Municipalities & Towns. Citypopulation.de website. Retrieved 21 February 2023.
- ↑ Location of Muridke - Falling Rain Genomics
- ↑ Murīdke City Population Census 2017
- ↑ Tanks, dead bodies in Muridke: Visuals emerge from Pakistan after India's Operation Sindoor strike
- ↑ Visuals show LeT's Muridke Markaz Taiba reduced to rubble after Operation Sindoor