உள்ளடக்கத்துக்குச் செல்

முரா (அரக்கன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முரா, தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். மூவுலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், முதலில் இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முராவை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரணடைந்தார். சிவபெருமான் தேவர்களைத் திருமாலிடம் சென்று முறையிடச் சொன்னார். இந்திரன் தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைய, அவர்களைக் காப்பதற்காகத் திருமால் முராவுடன் கடும் போரிட்டு அவனைக் கொன்றார். இதனால் திருமால் தன் பகைவனை (முரா) அழித்த காரணத்தால் முராரி என்றும் அழைக்கப்படுகிறார்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரா_(அரக்கன்)&oldid=4056414" இலிருந்து மீள்விக்கப்பட்டது