முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி
முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி | |
---|---|
![]() | |
23வது ஒடிசா ஆளுநர் | |
பதவியில் 21 ஆகத்து 2007 – 9 மார்ச்சு 2013 | |
முன்னையவர் | இராமேசுவர் தாக்கூர் |
பின்னவர் | எஸ். சி. ஜமீர் |
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் 1980–1994 | |
தொகுதி | மகாராட்டிரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மும்பை, பம்பாய் மாகாணம், இந்தியா | 10 திசம்பர் 1928
இறப்பு | 15 சூன் 2024 | (அகவை 95)
தேசியம் | இந்தியா |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி, நிர்வாகி |
முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி (Murlidhar Chandrakant Bhandare)(10 திசம்பர் 1928-15 சூன் 2024) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிரத்தினைச் சேர்ந்த மூத்த இந்திய தேசிய காங்கிரசு தலைவராகவும், 1980-1982,1982-1988 மற்றும் 1988-1994 ஆகிய மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.[1] இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றிய பண்டாரி, இரண்டு முறை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.[2] 19 ஆகத்து 2007 அன்று ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர், 21 ஆகத்து 2007 அன்று பதவியேற்றார்.[3] சூன் 9, 2008 அன்று, இவர் இந்தியாவின் 2ஆவது தேசிய மகள் தினத்தை (நந்தினி திவாசு) குறித்தார். 2013 மார்ச் 9 அன்று எஸ். சி. ஜமீர் நியமிக்கப்படும் வரை இவர் பதவியில் தொடர்ந்தார். இவரது சுயசரிதை, தி ஆர்க் ஆப் மெமரி மை லைப் அண்ட் டைம்சு (The Arc of Memory: My Life and Times) மார்ச் 2024-இல் வெளியிடப்பட்டது. இவர் தனது 95 வயதில் சூன் 15,2024 அன்று இறந்தார்.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajya Sabha Members". Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.
- ↑ "Bio-Data of His Excellency, Shri Mrlidhar Chandrakant Bhandare". Archived from the original on 2009-04-12. பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
- ↑ "Tiwari appointed new Andhra governor" பரணிடப்பட்டது 11 சனவரி 2019 at the வந்தவழி இயந்திரம், IST, TNN (The Times of India), 20 August 2007.
- ↑ Bhandare, Murlidhar C. (2024-03-24). "Murlidhar Bhandare's son almost missed his exams in 1973. Rajiv Gandhi came to his rescue". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 25 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-25.
- ↑ Sharma, Nootan (2024-03-25). "Launch of Murlidhar Bhandare's memoir had no big speeches. His love story was the focus". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 25 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-25.
- ↑ "Former Odisha Guv Murlidhar Chandrakant Bhandare Passes Away". பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.